க்ரைம்

கணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கள்ளக்காதலன்! முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் பறிபோன உயிர்..

தமிழரசனின் மனைவி பிரியா வயது (32), இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் மற்றும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது.

Muthu Lakshmi

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசித்தவர் தமிழரசன் வயது (35), இவர் ஜூலை 18ம் தேதி இரவு கன்னிகாபுரம் என்ற இடத்தில் தலையில் பலமாக வெட்டுபட்டு, முகத்தில் மிளகாய் பொடி தூவி கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழரசன் கடந்த 8ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழரசனின் மனைவி பிரியா வயது (32), இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் மற்றும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது. திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. திருத்தணி நகராட்சியில் பிரபல இருசக்கர வாகனம் ஷோரூம் ஒன்றில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். ஜூலை 18 - சனிக்கிழமை இரவு அவரது மனைவி பிரியாவிடம், “பிள்ளைகளுக்கு பரோட்டா வாங்கி வருவதாக” தெரிவித்து விட்டு சென்றுள்ளார். மேலும் “சின்ன வேலை இருக்கு வருகிறேன்” என்றும் தெரிவித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் அவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் ஜூலை 19 அதிகாலை வேளையில் தமிழரசன் கன்னிகாபுரம் என்ற இடத்தில், தலையில் பலமாக வெட்டுப்பட்டு முகத்தில் மிளகாய் பொடி தூவி கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என சந்தேகிக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மற்றும் உடலில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மெக்கானிக் தமிழரசனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் 17 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 8ம் தேதி மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை 25 நாட்களாக திருத்தணி போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இதற்கிடையில் அந்த தாக்குதல் நடத்தியது யார்? என்ன காரணம் என்ற விசாரணைகள் தீவிரம் பெற்றது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார் (32), காட்பாடியைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி ஆவார். சிசிடிவி பகுப்பாய்வு மற்றும் தமிழரசனின் மனைவி பிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழரசனுக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த பிரியா என்ற பெண்ணிற்கும் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தனியார் மேட்ரிமோனி மூலமாக பார்க்கப்பட்டு இரு வீட்டார் சம்மதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு தற்போது ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தமிழரசன் மது போதைக்கு அடிமையாகி உள்ளார் மேலும் பிரியா திருத்தணி நகராட்சியில் தனியார் பிரபல டீக்கடையில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பிரியாவுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, காட்பாடி பகுதியில் வசித்தபோது அக்கம் பக்கத்தில் இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருடன் 2014 ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரின் அக்கா வீடும், அவரது கணவர் வீடும் பிரியாவின் வீட்டிற்கு அருகில் இருந்ததால், அவர் அடிக்கடி அப்பகுதிக்கு சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பிரியாவுக்கு தமிழரசனுடன் திருமணம் நடைபெற்றதையடுத்து, ஜெயக்குமாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் மீண்டும் தொடர்பில் வந்துள்ளனர். பிரியா தாம் வசிக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை ஜெயக்குமாரிடம் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவர் திருத்தணிக்கு அடிக்கடி வந்து சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தனியாக சந்தித்து வந்ததாகவும், இந்த தொடர்பை பிரியா தனது கணவர் தமிழரசனுக்கு தெரியாமல் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான தமிழரசனுக்கும் ஜெயக்குமாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 19ஆம் தேதி கன்னிகாபுரம் பகுதியில் தமிழரசனும் ஜெயக்குமாரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற தமிழரசனை வழிமறித்த ஜெயக்குமார், அவரது மீது மிளகாய் தூள் தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற ஜெயக்குமார், வேலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அந்த வாகனத்தை எரித்துவிட்டு சுவடுகளை அழிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழரசனின் செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த வழக்கில், ஜெயக்குமார் மற்றும் தமிழரசனின் செல்போன் சிக்னல் விவரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தனர். கள்ளக்காதலியான பிரியாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் திட்டமிட்டு தமிழரசனை கொலை செய்ததாக ஜெயக்குமார் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்