அரியலூர் மாவட்டம் திருமனுர் கிராமத்தை சேர்ந்தவர் வேதிய ராஜ் இவருக்கு திருமணமாகி மனைவியும் 20 வயதில் லாரா என்ற மகளும் உள்ளனர். லாராவிற்கு திருமணமாகாத நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் வேதிய ராஜுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு உதவியாக லாராவும் அவரது தாயாரும் மருத்துவமனையில் இருந்துள்ளனர் .
தொடர்ந்து இன்று அதிகாலை லாராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, தனக்கு குழந்தை பிறப்பது யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்த லாரா கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்று எடுத்துள்ளார்.
குழந்தை வயிற்றில் இருக்கும் போதே குழந்தையை கலைக்க முயற்சித்துள்ளார் லாரா. ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனதால் அவ்வாறு செய்ய முடியாமல் இருந்துள்ளார். கழிவறைக்கு சென்று 3 மணி நேரம் போராடி பெற்றெடுத்த குழந்தையை கழிவறைக்குள் அமுக்கி கொன்றுள்ளார்.
குழந்தையின் தலை மற்றும் உடல் அந்த குழிக்குள் போன நிலையில் கால்கள் உள்ளே செல்லாமல் சிக்கியுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற மருத்துவமனையின் துப்புரவு பணியாளருக்கு சந்தேகம் வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் மருத்துவமனையின் பிற ஊழியர்களின் உதவியுடன் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தையின் கால்கள் கழிவறையில் இருந்த நிலையில் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர். தப்பி செல்ல முயன்ற லாராவை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் கொலையை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்