
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டிக்கு இந்தியாவின் 37 -வது டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக தேர்வாகியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்களாக விளங்கிய விராட் க்ஹோலியும், ரோஹித் ஷர்மாவும் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தங்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.இந்நிலையில் வருகிற ஜூன் 11-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. அதற்கு முன்னநாத இந்திய அணி மற்றும் அதில் பங்கு பெறவுள்ள வீரர்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பிசிசிஐ.
இளம் கேப்டன்
சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 25 வயதான கில், ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கும் ஐந்து போட்டிகளைக் கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்..
விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் , அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அனுபவம் மற்றும் இளைய வீரர்களின் கலவையுடன் சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
முக்கிய மாற்றங்கள்
இந்திய அணியின் புதிய டெஸ்ட் அணியில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
கருண் நாயர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடாத நாயர், தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
சாய் சுதர்சன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இளைய வீரர்கள், தங்களது முதல் டெஸ்ட் அழைப்பை பெற்றுள்ளனர். இது, அணியை நீண்ட காலத்திற்கு மறுசீரமைக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது.
துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் ஆக விளையாடுவார்.
ஜஸ்பிரித் பும்ரா அணியில் இடப்பெற்றிருந்தாலும் அனைத்து ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ.தெரிவித்துள்ளது.
த்ருவ் ஜுரேல் இரண்டாவது விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் ஆல்-ரவுண்டர்கள் ஆக அணியில் செயல்படுவர்.
குல்தீப் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பினர்கள் ஆக அணியில் உள்ளனர்.
ஷமி ஏன் இடம் பெறவில்லை?முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக மூத்த பேஸ்பவுலர் மொஹம்மது ஷாமி அணியில் இடம் பெறவில்லை. அணியின் தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கர்,” ஷாமி உடல்நிலை சரியில்லாததால் அணியில் இடம் பெறவில்லை. "அவர் தற்போதைக்கு விளையாடும் பார்மில் இல்லை,.," என்று கூறினார்,
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.இந்த அணியின் புதிய கட்டமைப்பு இந்திய கிரிக்கெட்டின் புதிய குறிப்பிட்ட தலைமுறையை முன்னேற்றும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்