சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமியின் கழுத்தை நெருக்கி கொலை செய்திருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு,.
சென்னை ஓட்டேரி எலிக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவருடைய மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அமர்நாத் இரண்டாவதாக உஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவருடைய மூத்த மகள் பிரதிஷ்கா அவரது உறவினர் வீட்டில் வளர்ந்து வருவதாகவும் இளைய மகள் நந்தினி தந்தையுடன் வசித்து வருகிறார், மேலும் அருகில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நந்தினியின் இரண்டாவது மனைவியான உஷா மற்றும் நந்தினிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நந்தனி மயங்கி கீழே விழுந்து விட்டதாக அருகில் உள்ளவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் நந்தினியை ஆட்டோவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது கழுத்தில் காயங்களுடன் இருந்துள்ளார். மேலும் மருத்துவர்கள் பரிசோதனையில் நந்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் உஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலை அறிந்த நந்தினியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உஷா நந்தினியை துப்பட்டாவால் கழுத்தை நெருங்கி கொலை செய்திருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில் போலீசார் தரப்பில் நந்தினி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்த நிலையில் மருத்துவ பிரேத பரிசோதனை முடிவில் நந்தினி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.