Elisa Lam Elisa Lam
க்ரைம்

"3 வாரங்கள் கழித்து நிர்வாண சடலமாக மீட்பு.. யாரிடம் இருந்து தப்பிக்க முயன்றார்?" CCTVல் பதிந்த தீர்க்கப்படாத 'அமானுஷ்ய காட்சிகள்'

தொட்டிகளில் ஒன்றின் உள்ளே எலிசா நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார்.

Vinvizhi Leninton

13 ஆண்டுகளாக, எலிசா லாம் என்ற பெண்ணின் தீர்க்கப்படாத மரணத்தைச் சுற்றியுள்ள விடைதெரியாத கேள்விகள், இன்றளவிலும் புலனாய்வாளர்கள் மற்றும் உண்மைக் குற்ற ஆர்வலர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. குறிப்பாக இணையவாசிகளை ஈர்த்துவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸின் புகழ்பெற்ற 'செசில்' ஹோட்டலில் தங்கியிருந்த ​​21 வயதான கனடிய கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனார். அவர் கடைசியாக 2013, ஜனவரி 31 அன்றுதான் உயிருடன் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

எலிசா காணாமல் போனதாக மறுநாளே அவருடைய பெற்றோரிடமிருந்து புகார் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்கு வந்தது. காரணம் எலிசா தினமும் அவருடைய வீட்டிற்கு பி[பேசும் ஒரு பழக்கம் உடையவர். புலனாய்வாளர்கள் அந்த இடத்தை சோதனையிட்டனர், ஆனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கேமராக்களின் நூற்றுக்கணக்கான மணிநேர கண்காணிப்புக் காட்சிகளை துப்பறிவாளர்கள் ஆய்வு செய்த பின்னரே, லாம்மின் கடைசித் தருணங்களாக இருந்திருக்கக்கூடியவற்றைக் கண்டுபிடித்தனர். அதில் ஒரு விசித்திரமான காணொளியில், எலிசா ஹோட்டலில் இருந்த லிஃப்டில் மிகவும் பயந்த நிலையில், ஒரே நேரத்தில் பல பொத்தான்களை அழுத்துவதும், யாரோ துரத்துவது போல கதவுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும் காணப்பட்டது. காவல் துறை ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று இந்த CCTV காட்சிகளை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டபோது, ​​அது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், எலிசா காணாமல் போன மர்மத்தை வெளிக்கொணர இணையத் துப்பறிவாளர்களைத் தூண்டியது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட நீர்தொட்டி

அதன் பிறகு, 2013 பிப்ரவரி 19 அன்று, அவர் காணாமல் போய் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, எலிசாவின் உடல் இறுதியாகக் கண்டெடுக்கப்பட்டது. எலிசா தங்கி இருந்த அதே ஹோட்டலில் அவர் இறந்துஹ் 3 வாரங்களுக்கு பிறகு குறைந்த நீர் அழுத்தம் மற்றும் நிறம் மாறிய குழாய் நீர் குறித்து ஹோட்டல் விருந்தினர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, செசில் ஹோட்டலின் மொட்டை மாடியில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டிகளை ஒரு பராமரிப்புப் பணியாளர் ஆய்வு செய்தார். அங்கு, தொட்டிகளில் ஒன்றின் உள்ளே எலிசா நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார்.

கல்லூரி மாணவியான எலிசாவிற்கு மருத்துவ ரீதியான பிரச்சனைகள் இந்தக்கதாகவும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் பகிர்ந்துள்ளனர். அவர் மனநல பிரச்சனைகளுக்காக மருந்துகள் எடுத்து வந்துள்ளார். இதற்கு முன்னர் பலமுறை, எலிசா தனது மருந்துகளை உட்கொள்ளாததால் மாயத்தோற்றங்கள் மற்றும் பிரமைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவரது நிலைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அவர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கியிருந்த ஹோட்டலும் கூட அங்குள்ள மக்களால் ஒரு அமானுஷ்ய ஹோட்டலாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் தொடர் கொலையாளிகள் தாக்கியதாகவும், பலர் இந்த ஹோட்டலில் தங்கி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், கொலைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Cecil Hotel death

மேலும், இந்த ஹோட்டலுக்கு சுற்றுலா சொல்லவந்த எலிசா இங்கு அரை எடுத்து தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் 2007 முதல் 2017 வரை 10 ஆண்டுகளில் 80 மரணங்களைக் கண்டதாக அங்கு வேலை செய்த ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். ஹோட்டல் விருந்தினர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் தொட்டிகளை பார்வையிட ஹோட்டல் ஊழியர் சென்றியிருக்கிறார். மேலும், 4 தொட்டிகளில் ஒரு தொட்டி பாதி மூடியுய நிலையில் இருந்துள்ளது. அதை என்னவென்று பார்த்தபோதுதான் அதில் எலிசா நிர்வாணமாக மிதந்துள்ளார். அவரது அறையை யாரும் அத்துமீறி திறந்ததற்கான வாய்ப்பில்லை, அவரை யாரும் இழுத்து செலவும் இல்லை, கட்டாயப்படுத்தி தொட்டியில் தள்ளிவிடவும் இல்லை. அப்படி இருக்க அவர் எப்படி அந்த தொட்டி விழுந்தார்? அவர் விழ காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும், எலிசாவை விட பலமடங்கு பெரிதாக இருக்கும் அந்த தொட்டில் அவர் எப்படி விழுந்திருப்பார்?. மேலும், தொட்டியின் மூடியை தனி ஒரு ஆளாய் அவரால் எப்படி திறந்திருக்க முடியும்? அதற்கு வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், தற்போது வரை இந்த வழக்கு தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.