க்ரைம்

பெண் காவலருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆய்வாளர்.. தட்டிக்கேட்ட கணவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம்!

அதில் உள்ள நியாயம் வெளி வராமல் போய்விடும். இதற்காகத்தான் இன்ஸ்டாகிராம் வந்துள்ளேன்...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திலீபன். இவர் அதே காவல் நிலையத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஸ் அனுப்பி சிறிது நேரத்தில் அதை டெலிட் செய்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் காவலர் தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பெண் சிறப்புப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டும், அந்தப் பெண் காவலருக்கு பணி மாறுதலுக்கு செல்லவிடாமல் ஆய்வாளர் திலீபன் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் காவலர் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெண் காவலரின் கணவர் கடந்த (மே 6) ஆம் தேதி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளரிடம் இது பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி காவல் நிலையம் முன்பு ஆய்வாளர் திலீபன் பெண் காவலரின் கணவன் ஆகிய இருவரும் சராமாறியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர் திலீபன் பெண் காவலரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து ஆய்வாளர் திலீபன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார் அதில் “என் மீது பாலியல் புகார் என செய்திகள் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகி உள்ளது. என்னுடைய கடமை என் தரப்பு நியாயத்தை நான் சொல்லிவிட வேண்டும் ஏனென்றால் முதலில் பரப்பப்பட்ட தகவல் வேகமாக பரவி விடும். பின்னர் அதில் உள்ள நியாயம் வெளி வராமல் போய்விடும். இதற்காகத்தான் இன்ஸ்டாகிராம் வந்துள்ளேன்.

அதிகாரிகள் வருத்தப்பட வேண்டாம் நான் இந்த காவல் நிலையத்தில் ஆறு பெண் போலீசார் உள்ளனர் அவர்களை நான் பிள்ளைகள் என்று தான் சொல்வேன் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் நான் பிள்ளைகள் என்று தான் சொல்வேன் என் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை வேலை செய்யவில்லை என்றால் சற்று ஹார்ஸாக பேசுவேன் தவிர, அவர்களுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் மெண்டல் டார்ச்சரும் நான் கொடுப்பதில்லை. இது மாதிரியான புகார் என் மீது வந்திருக்காது என நான் 100% நம்புகிறேன். அப்படி புகார் கொடுக்கப்பட்டால் எனது செல்போனை அதிகாரியிடம் எப்ப வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளேன்” என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று நெல்லை சரக டிஐஜி பொறுப்பு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆய்வாளர் திலிப்பனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.