2020-ம் ஆண்டில் தனது வளர்ப்பு தந்தையை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட கலிஃபோர்னியா பெண், தனது வளர்ப்பு தந்தையின் கணினியில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களைக் கண்ட பின்னரே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
2020 புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் , 41 வயதான ஜேட் ஜாங்க்ஸ், தனது வளர்ப்பு தந்தையான தாமஸ் மெர்ரிமனுக்கு (64) நிறைய வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்து மயக்கமடையச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்தி அவர் மூச்சுத்திணறடித்துக் கொன்றதாகவும், மறுநாள் அவரது உடல் அவரது வீட்டு வாகனம் நிறுத்துமிடத்தில் குப்பைக் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மெர்ரிமேனின் இல்லத்தைச் சுத்தம் செய்தபோது, ஜாங்க்ஸ் அவரது மடிக்கணினியில் தன்னுடைய புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை கண்டெடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் உடல் பாகங்களின் அடிப்படையில் ஆபாசமாக இருந்ததாக அவரது சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"திரைப்படத்தில் கூட இப்படி ஒரு விஷத்தை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்" என்று கண்ணீர் மல்க ஜாங்க்ஸ் கூறியுள்ளார். இது அவரை முற்றிலுமாக மனதை உடைத்ததாக கூறியுள்ளார். ஜாங்க்ஸ், கடந்த 2023-ல் கொலைக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜாங்க்ஸ், தனது வளர்ப்பு தந்தை மெர்ரிமனுக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, "நான் அவருக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்துவிட்டேன்" என்று அவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், "அவர் கண்விழிக்கும்போது அவரது தலையில் ஓங்கி அடிக்கப் போகிறேன்," என்று ஜாங்க்ஸ் தனது குறுஞ்செய்தியில் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜாங்க்ஸின் நீண்டகால நெருங்கிய நண்பரான ஆடம் சிப்லியாக், இந்த குறுஞ்செய்தி பற்றி சாட்சி கூறும் கூண்டில் ஏறி, ஜாங்க்ஸ் தன்னிடம் மெர்ரிமேனைக் கொன்றுவிட்டதாகவும், அவரது உடல் தனது வாகனத்தில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டதாக கூறியதாக சாட்சியமளித்தார். தனது காரிலிருந்து மெர்ரிமேனின் குடியிருப்புக்கு உடலைக் கொண்டு செல்ல ஜாங்க்ஸ் தனது உதவியைக் கோரியதாகவும், ஆனால் அந்தக் கோரிக்கையைத் தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் ஆடம் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
ஜாங்க்ஸ் தன்னிடம் கூறியதை மறுநாள் காலையில் சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ஆடம் கூறியுள்ளார். "ஜேட் ஜாங்க்ஸ் தனது வளர்ப்பு தந்தையை மிகவும் நேசித்தார்," என்று பாதுகாப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து , 2024 அக்டோபரில், கலிபோர்னியா மேல்முறையீட்டு நீதிபதி ஒருவர் ஜாங்க்ஸின் கொலைக் குற்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்