nandhini  
க்ரைம்

“மருமகளை துண்டு துண்டாக வெட்டிய மாமியார்” - சாங்கியம் செய்வதாக அழைத்துச் சென்று சடலமாக்கிய கொடூரம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

குடும்பத்திற்கு நல்லது நடக்க சில சாங்கியம் செய்ய வேண்டும் என நந்தினியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மரியாரோசாரியோ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மரியாரோசாரியோவின் தாயுடன் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மரியாரோசாரியின் தாய் கிரிஸ்தோப்மேரி குடும்பத்திற்கு நல்லது நடக்க சில சாங்கியம் செய்ய வேண்டும் என நந்தினியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டு தினங்களாகியு நந்தினி மற்றும் தாய் கிறிஸ்தோப்மேரி வீடு திரும்பாததால் கணவர் மரிய ரொசாரியோ தனது மனைவி நந்தினி செல்போன் மற்றும் தாயின் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மரியா ரோசாரியோ சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்ற காவல்துறையினர் முதற்கட்டமாக மருமகளை அழைத்துச் சென்ற மாமியார் கிறிஸ்தோப்மேரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாங்கியம் செய்ய வேண்டும் என சோழம் பட்டு கிராமம் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுக்தா ஆற்றின் கரையோரம் தனது மருமகளை அழைத்து சென்ற கிறிஸ்தோப்மேரி நந்தினியின் தலையைத் துண்டித்து கொலை செய்து பின்னர் உடலை தனித்தனியாக வெட்டி ஆற்றங்கரையோரம் வெவ்வேறு இடங்களில் புதைத்து விட்டதாக போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தார். எனவே சோழம் பட்டு கிராமம் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுக்தா ஆற்று கரையோரம் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு தடவியல் துறை மற்றும் வருவாய்த் துறையினர், மருத்துவ பரிசோதனை குழு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் மருத்துக்குழு அதிகாரிகள் வந்தவுடன் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்னரே இந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரிய வரும் என சொல்லப்படுகிறது. மருமகளை மாமியார் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.