“கரண்ட் ஷாக் வைத்து கொல்லப்பட்ட மனைவி” - குழந்தைகளுக்கு அருகிலேயே துடிதுடித்த தாய்… காலையில் கணவன் அரங்கேற்றிய பக்கா நாடகம்!

மனைவி தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என நினைத்த கருணாகரன் மனைவி மீது சந்தேகப்பட தொடங்கியுள்ளார்....
“கரண்ட் ஷாக் வைத்து கொல்லப்பட்ட மனைவி” - குழந்தைகளுக்கு அருகிலேயே துடிதுடித்த தாய்… காலையில் கணவன் அரங்கேற்றிய பக்கா நாடகம்!
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் 43 வயதுடைய கருணாகரன். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகளான 33 வயதுடைய கலையரசி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் டயர் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. எனேவ மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் கருணாகரன் கலையரசியிடம் தினந்தோறும் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என நினைத்த கருணாகரன் மனைவி மீது சந்தேகப்பட தொடங்கியுள்ளார். பின்னர் கலையரசியிடம் “என்னை விட்டு வேற யார் கூடவாவது வாழ்ந்துட்டு இருக்கியா” என கேட்டு தகராறு செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மன உளைச்சல் அடைந்த கருணாகரன் கலையரசியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன்படி நேற்று இரவு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த கலையரசன் கை மற்றும் கால்களில் இரும்பு கம்பியால் மின்சாரம் பாய்த்து கொலை செய்துவிட்டு பின்னர் காலை எதுவும் தெரியாதது போல மாமனார் மற்றும் அவரது உறவினர்களுக்கு போன் செய்து கலையரசி இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Admin

மகளின் இறப்பில் அவரது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு சென்ற கலையரசியின் பெற்றோர் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. மேலும் கலையரசியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கருணாகரன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அதனை நள்ளிரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சார ஷாக் வைத்து கொன்று விட்டு காலை உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக கூறி அவரது பெற்றோர்களிடம் நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து பள்ளிகொண்டா போலீசார் கருணாகரனை கைது செய்தனர்‌. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com