காஞ்சிபுரம் மாவட்டம் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் 21 வயதுடைய கருப்புசாமி. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சைலஜா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் சைலஜாவை அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
கருப்பசாமி மற்றும் சைலஜாவின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தனது காதலியான சைலஜாவினை கருப்பசாமி சேலத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மூன்று நாட்கள் தங்கி ஊர் சுற்றி பார்த்த காதல் ஜோடிகள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சைலஜாவின் பக்கத்து வீட்டு சிறுவன் சைலஜாவிடம் சென்று காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சைலஜா “நீ சின்ன பையன்டா” என கூறி அறிவுரை சொல்லி அனுப்பிவைத்துள்ளார். பின்னர் இன்ஸ்டாவில் கருப்பசாமிக்கு மெசேஜ் செய்த சிறுவன் கருசாமியிடம் சண்டை போட்டுள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் மாறி மாறி சண்டை இட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு தனது அறைக்கு அருகில் இருந்த டீ கடையில் அமர்ந்து கருப்புசாமி டீ குடித்து வந்துள்ளார்.
அப்போது மீண்டும் கருப்பசாமிக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் செய்த சிறுவன் எல்லை மீறி பேசி தகாத வார்த்தைகளை அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி “நீ தைரியம் இருந்த ஏரியாவுக்கு வாடா” என கூறி மெசேஜ் செய்துள்ளார். எனவே தனது நண்பர்கள் ஆறு பேரை அழைத்து கொண்டு டீக்கடைக்கு சென்ற சிறுவன் அங்கு அமர்ந்திருந்த கருப்பசாமியை பீர் பாட்டிலால் தாக்கி மயக்கம் அடைய செய்து ஆட்டோவில் கூட்டி சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
கருப்பசாமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் கருப்பசாமியை சராமாரியாக தாக்கி கொலை செய்ய வேறு இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்த உள்ளனர். அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே பொதுமக்கள் புகாரளித்ததை அறிந்து கொண்ட காவலர்கள் ஆறு போரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த கருப்பசாமியை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் சிறுவன் உட்பட ஆறுபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் மற்ற ஆறு பேரை சிறையிலும் அடைத்துள்ளனர். டீ அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞர் பீர் பாட்டிலால் தாக்கி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.