க்ரைம்

“இன்னொருத்தி புருஷன் கூட போய் இப்படி.. ச்சீ ” - உறவினருடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளம்பெண்.. கணவனுக்கு தெரிந்ததால் விபரீதம்!

வீட்டில் இல்லாத நேரத்தில் முருகன் பிரியங்காவுடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக...

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய கார்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பிரியங்கா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் கார்த்தி அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கார்த்திக் வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருக்கும் பிரியங்கா அக்கம் பக்கத்தினருடன் பேசி பாகை வந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியில் உள்ள உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு ரேற்கனவே ஜோதி என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி கார்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் முருகன் பிரியங்காவுடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

அடிக்கடி முருகன் கார்த்திக் வீட்டிற்கு செல்வதை அறிந்து சந்தேகமடைந்த அவரது மனைவி ஜோதி கணவனின் செயலை கண்காணிக்க தொடங்கிய நிலையில் அவர் பிரியங்காவுடன் தகாத உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஜோதி இதுகுறித்து பிரியங்காவின் கணவர் கார்த்தியிடம் தெரிவித்த நிலையில் இருவரும் சேர்ந்து முருகன் மற்றும் பிரியங்காவை கண்டித்து குழந்தைகளின் நலனுக்காக அவர்களது தாகத்தை உறவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது பிரியங்கா ஜோதியிடம் தேவையில்லாமல் பேசிய நிலையில் இருவருக்கும் இடையே வாங்குவதை ஏற்பட்டு அது தகராறாக முற்றியுள்ளது அப்போது ஜோதி அனைவரின் முன்னிலையிலும் “இன்னொருத்தி புருஷன் கூட இப்படி இருக்க வெட்கமா இல்ல” என கேட்டு பிரியங்காவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. தகாத உறவு வெளியில் தெரிந்ததால் மன உளைச்சலுக்கு அடைந்த பிரியங்கா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.