“தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்” - இரவில் கேட்ட அலறல் சத்தம்… தீ உடல் முழுவதும் பரவி எரிந்த பயங்கரம்!

பெட்ரோலை ஊற்றிய நிலையில் சிகரெட்டில் இருந்த நெருப்பு பற்றி பிச்சப்பிள்ளை உடல் முழுவது தீ பரவியது...
“தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்” - இரவில் கேட்ட அலறல் சத்தம்… தீ உடல் முழுவதும் பரவி எரிந்த பயங்கரம்!
Admin
Published on
Updated on
2 min read

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. இவருக்கு திருமணமாகி 27 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். பிச்சப்பிள்ளை கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மணிகண்டன் சரியாக படிக்காத நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடுத்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

மகனின் நிலையை பார்த்து வருத்தமடைந்த பிச்சப்பிள்ளை மணிகண்டனிடம் “குடிச்சி குடிச்சி ஒடம்ப கெடுத்துக்காத ஓழுங்க வேலைக்கு போய் சம்பாதிக்கிற வழிய பாரு” என கூறியுள்ளார். இதனால் மகன் மற்றும் தந்தைக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு குடுத்துவிட்டு வரும் மணிகண்டன் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் தேவையில்லாமல் பேசி வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.

Admin

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு குடித்திவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன் தந்தையின் இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து அவரது தந்தை பிச்சப்பிள்ளையை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன் வெளியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றிய நிலையில் சிகரெட்டில் இருந்த நெருப்பு பற்றி பிச்சப்பிள்ளை உடல் முழுவது தீ பரவியது.

இதனால் தீயில் சிக்கிக் கொண்ட பிச்சப்பிள்ளை அலறி துடித்த நிலையில் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உடனடியாக அவர் மீது இருந்த தீயை அணைத்து மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்க முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவல் அறிந்து இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com