sagayaraj 
க்ரைம்

“டீ கடையில் தொடங்கிய காதல்” - 12 வயது சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற காதலன்.. மகளை காணாமல் தவித்த தாய்!

உடல்நிலையில் மோசமான காரணத்தால் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி அருகே தெருவுப்பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி நிவேதா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  நிவேதா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரது தந்தை நோய்வாய் பட்டு வீட்டில் முடங்கியுள்ளார். தாய் வீட்டு வேலை செய்து நிவேதாவையும் அவரது தந்தையையும் கவனித்து வந்துள்ளார்.

கடந்த மாதம் மாணவியின்  தந்தைக்கு உடல்நிலையில் மோசமான காரணத்தால் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியில் டீ கடையில் வேலை செய்யும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான சகாய ராஜ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரு மாதமாக காதலித்து வந்த சூழலில் சகாய ராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த (மே13) தேதி வீட்டை விட்டு சிறுமியை பெற்றோருக்குத் தெரியாமல் கோவைக்கு அழைத்து சென்றுள்ளார். காலையில் ஆதார் அட்டை புதுப்பிக்க போகிறேன் என சொல்லிவிட்டு வெளியில் சென்ற நிவேதா இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த தாய் இதுகுறித்து போலீசில் தகவலாளித்துள்ளார்.

நிவேதா குறித்து விசாரணை செய்ய தொடங்கிய போலீசார் சகாயராஜுடன் நிவேதா சென்றதை கண்டுபிடித்து  இருவரையும் தேடி வந்த சூழலில், இருவரது மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால்,  கண்டுபிடிக்க சிரமப்பட்டு வந்தனர் இந்நிலையில் சகாயராஜ் தனது உறவினரிடம் செலவுக்கு பணம் வாங்க நாகர்கோவில் பகுதிக்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த போலீசார் சகாயராஜ் உறவினர் வீட்டில் வைத்து சகாயராஜை கைது சிறுமி  நிவேதாவை மீட்டுள்ளனர். மேலும் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதால் சகயராஜ் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்