க்ரைம்

“நீ இல்லாம நான் எப்படி மச்சான் உயிரோட இருப்பேன்” - அடுத்தடுத்து உயிரிழந்த வாலிபர்கள்.. இருவரை காவு வாங்கிய ஐபோன் மோகம்!

வசந்த குமாரும் ஆரல்வாய்மொழி வடக்கூர் சேர்ந்த 19 வயதுடைய முத்து கிஷோர் என்பவரும் ஒரே கல்லூரியில் பயின்று...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள மேல் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கும் சந்தன மாரி என்பவருக்கும் திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் ஐயப்பன் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான 20 வயதுடைய வசந்தகுமார் அதே பகுதியில் உள்ள ஒரு ஐடிஐயில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்த வசந்த் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் வசந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில் வசந்த குமாரும் ஆரல்வாய்மொழி வடக்கூர் சேர்ந்த 19 வயதுடைய முத்து கிஷோர் என்பவரும் ஒரே கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இருவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இதில் முத்து கிஷோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவணை முறையில் பணம் கட்டும் முறையில் ஐபோன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணை தொகையை செலுத்தி வந்த நிலையில் அதன் பின்னர் பணமில்லாமல் தவணை செலுத்தாமல் இருந்திருக்கிறார்.

இதனால் நிறுவனத்தில் இருந்து வந்த ஆட்கள் தவணை தொகையை செலுத்த வேண்டும் என தொல்லை கொடுத்து வந்திருக்கின்றன. மேலும் முது கிஷோரின் பெற்றோர்களும் அவரை தொடர்ந்து வசை பாடி வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த அவரை கடந்த மூன்றாம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பன் உயிரிழந்த வருத்தத்தில் இருந்த வசந்த குமார் கல்லூரிக்கு கூட செல்லாமல் பித்து பிடித்தது போல இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் நேற்று வீட்டில் அனைவரும் வெவ்வேறு வேலை செய்து கொண்டிருந்த தருணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வசந்தகுமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேசிய காவல்துறையினர் நண்பன் இறந்த சோகத்தில் வசந்த குமார் அவரது சட்டை போட்டு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.