

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சாமநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே டீ கடை வைத்து நடத்தி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தனசேகர பாண்டியன். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் அவனியாபுரத்தை சேர்ந்த 25 வயதுடைய காவியா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே கணவன் மனைவி குழந்தைகளுடன் திருப்பரங்குன்றம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
டீ கடை வைத்து நடத்தி வரும் தனசேகரன் வழக்கம்போல் கடந்த (பிப் 6 ) ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு டீக்கடையை திறப்பதற்காக சென்ற போது டீக்கடை வாசலில் அடையாளம் தெரியாத 6 பேர் அமர்ந்திருந்ததை கண்டு ‘கடையை திறக்க வேண்டும் எழுந்திருங்கள்’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த மர்ம கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனசேகரை சரமாரியாக வெட்டியதில் அவர் தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து மர்ம கும்பல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் தனசேகரன் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தனசேகரன் குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்பி அரவிந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தனசேகரன் மனைவி உட்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனசேகர பாண்டிக்கும் அவனியாபுரத்தைச் சேர்ந்த மனைவி காவியாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் காவியா ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு பள்ளித்தோழனான மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குட்டிப் பேச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் மகளை கண்டித்து தனசேகரனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு காவியா காதலை மறந்து குடும்பம் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மீண்டும் காவியாவுக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிமுகமான கார்த்திக் காவியாவுடன் உடன் தனது நட்பை தொடர்ந்துள்ளார்.
இருவரும் தினமும் செல்போனில் அதிக நேரம் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி காவியா அடிக்கடி அவனியாபுரம் செல்வதாக கூறிவிட்டு கார்த்திக் உடன் தனிமையில் இருந்து வந்திருக்கிறார். இத்துணை குறித்து அறிந்த தனசேகரன் மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவியா கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கார்த்தியுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
எனவே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவியாவை தேடி வந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த காவியா ‘தான் தவறு செய்து விட்டதாகவும் இனிமேல் திருந்தி வாழ்வதாக கூறி மீண்டும்’ தனசேகரனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அப்போது மீண்டும் காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்த காவியா கார்த்திக் உடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி காலை கடையை திறக்க சென்று தனசேகரனை கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மாதவன் 22 , இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான மதுரை வில்லாபுரம் சேர்ந்த கார்த்தி என்ற குட்டி கார்த்தி, அவரது சகோதரர் குட்டிமணி மற்றும் பாரதி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.