arumanai and aji  
க்ரைம்

“கள்ளக் காதலனுடன் வீடு எடுத்து தங்கியிருந்த மனைவி” - தாயின் செயலால் வருத்தமடைந்த மகன்.. கணவர் சரமாரியாக தாக்கி வெறிச்செயல்!

அஜியுடன் வாழ நினைத்த லதா தனது ஒரு மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜஸ்டின் கூலித்தொழில் செய்து குடும்பபாதை காப்பாற்றி வந்த நிலையில் லதா வீட்டிற்கு அருகில் உள்ள ரப்பர் பால் வெட்டும் தோட்டத்தில் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மது குடிக்கும் பழக்கம் உடைய ஜஸ்டின் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறை செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் லதாவிற்கு தன்னுடன் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அருமனை பகுதியை சேர்ந்த அஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து மூன்று வருடங்களாக இருவரும் பலகை வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜஸ்டின் லதாவை குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. எனவே ஜஸ்டினை பிரிந்து காதலன் அஜியுடன் வாழ நினைத்த லதா தனது ஒரு மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அஜி மற்றும் லதா அருமனை பகுதியில் உள்ள காரோடு கிராமத்தில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் லதாவின் மகன் தாயின் செயல்பாடுகள் பிடிக்காமல் தந்தை ஜஸ்டின் உடன் சென்றிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜி வேறு பெண்ணை வாடகை வீட்டில் குடியமர்த்தி உள்ள தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் அஜியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.

police station.

இந்த நிலையில் வேறு ஒருவனுடன் குடும்பம் நடத்தி வரும் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த ஜஸ்டின் நேற்று முன்தினம் அவரது நண்பர் இருவருடன் லதா தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து லதா மற்றும் அஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் லதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்த அஜியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், லதாவை அருமனை அரசு மருத்துமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் அஜி மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் மீறிய உறவில் வசித்து வந்த மனைவி மற்றும் அவரது காதலரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிய கணவர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில் அருமனை பகுதியில் பதுங்கி இருந்த ஜஸ்டின் நேற்று மாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் வாழ்ந்து வந்த மனைவியையும் காதலனையும் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.