கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய சித்திக்.பட்டதாரி வாலிபரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு குளச்சல் கடற்கரை அருகே உள்ள பள்ளி வாசல் முன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி இருந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் சித்திக்கை மீட்டு இருசக்கர வாகனம் மூலம் கொண்டு வந்து குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சித்திக் இடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பாஷித் என்ற நபருக்கும் தனக்கும் கருத்து மோதலால் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் பாஷித் தன்னை குளச்சல் கடற்கரை பகுதிக்கு வருமாறு செல்போனில் தொடர்பு அழைத்ததால் தான் கடற்கரைக்கு வந்த போது பாஷித் தனது சக நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து தன்னை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாகவும் சத்தம் போடவே அங்கிருந்து தப்பி ஓடிய தாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாஷித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பாஷித் மற்றும் சித்திக் இருவரும் வெவ்வேறு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் சித்திக் பாஷித் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த சிலரை பேசி தன்னுடைய கட்சி அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சித்திக் மற்றும் பாஷித் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே சித்திக்கை கடற்கரை பகுதிக்கு வர வைத்து பாஷித் கொலை முயற்சி செய்ததாக தெரிவருகிறது. தற்போது பாஷித் மற்றும் அவருக்கு உதவிய சக நண்பர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
அரசியலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பகையாக மாறி வாலிபர் கடற்கரைக்கு வரவழைத்து கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் சித்திக் மற்றும் பாஷித் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் நடக்காமல் இருக்க போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.