master  
க்ரைம்

“கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவிகள்” - வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை.. விரைந்து கைது செய்யப்பட்ட கராத்தே மாஸ்டர்!

இதைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமிகளின் தாய் நடந்த சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது கராத்தே தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற மாணவிகளை குட் டச், பேட் டச், சொல்லி தருவதாக தனது பழைய வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கராத்தே மாஸ்டர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 46 வயதான ஜெயின் மிலாடு. கராத்தே மாஸ்டரான இவர் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மைதானத்தில் “கோஜு ரியூ ஒகினாவா” என்ற பெயரில் கராத்தே அகாடமி நடத்தி வருகிறார் இந்த அகாடமியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கராத்தே தற்காப்பு கலை பயின்று வருகின்றனர். சனிக்கிழமை அதிகாலை அந்த அகாடமியில் தற்காப்பு கலை பயின்று வரும் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியும் அவரது அக்காவான 11-ஆம் வகுப்பு படிக்கும் 16-வயது சிறுமியும் கராத்தே பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பயிற்சிக்கு சென்று வீடு திரும்பிய 9-ஆம் வகுப்பு மாணவியான 14 வயது சிறுமி சோர்வுடன் காணப்பட்டதால்,இதனை கவனித்த தாய் சிறுமியிடம் விசாரித்த போது “அதிகாலை பயிற்சிக்கு சென்ற தன்னை கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு குட் டச், பேட் டச், பற்றி சொல்லி தருவதாக அவரது பழைய வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் பயிற்சிக்கு சென்ற தனது மூத்த மகளிடம் விசாரித்த போது கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு ஏற்கனவே தன்னையும் இது போன்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன சிறுமிகளின் தாய் நடந்த சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு மீது போக்சோ உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவனை கைது செய்து சிறையிலடைத்தனர். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்து கொள்ள தற்காப்பு கலை பயில வந்த மாணவிகளை வேலியே பயிரை மேய்ந்தது போல கராத்தே மாஸ்டரே குட் டச், பேட் டச், சொல்லி தருவதாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.