கன்னியாகுமரி மாவட்டம், அருகேயுள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி நகர் பகுதியில் பிளஸ் 1 பயிலும் அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி மாணவியை ஊர்மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி செருப்பாலும், கட்டைகளாலும் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி தீபிகாவின் தாய் மற்றும் உறவினர்கள்.
அப்போது “பக்கத்துவீட்டுக்காரர் ஆட்டோவில் தன் மகள்கள் பயணம் செய்ததால் ஆட்டோக்காரரின் மனைவி சந்திரா மற்றும் அவரது மகள்கள் நீங்கள் எப்படி என் கணவர் ஆட்டோவில் ஏறலாம் என கூறி தன் மகளை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலைசெய்து கொண்டார்” எனவே இதற்கு நீதி வேண்டும் அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தீபிகாவின் தாய் பேட்டி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த 40 வயதுடைய விஜயலட்சுமி என்பரது மகள் அதே பகுதியி உள்ள அரசுபள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் தீபிகா இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவரது காதலனாக கூறப்படும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரதீப் (21) என்பவரும் மாணவி இறந்த துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்,இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்ட தீபிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் அருந்ததியர் அமைப்பைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் தங்கள் மகளை தற்கொலைக்குதூண்டிய பக்கத்துவீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது "தனது மகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று மாலை பள்ளி முடிந்து பக்கத்து வீட்டுக்காரர் பொண்ணு ராஜன் என்பவரது ஆட்டோவில் அவர்கள் மகனுடன் தனது மகளும் வீட்டிற்கு வந்து இறங்கினால் இந்நிலையில் அவர்களது இரு மகள்கள் மற்றும் ஆட்டோக்காரர் பொண்ணுராஜனின் மனைவி சந்திராவும் ‘எங்களின் ஆட்டோவில் எப்படி நீங்கள் ஏறலாம்’ என கூறி தகாத வார்த்தைகளால் பேசி ஊர் மக்கள் முன்னிலையில் செருப்பாலும் கட்டையாலும் அடித்து அவமானப்படுத்தினர்.
இதை தட்டிக் கேட்க சென்ற தன்னையும் அடித்தனர் இதனால் மனமுடைந்த எனது மகள் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் இதற்கு காரணம் ஆட்டோக்காரரின் மகள்மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் எனதுமகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள், எனவே எனது மகள் தீபிகாவின் மரணத்திற்கு நீதிவேண்டும் அவர்களை கைது செய்ய வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று கன்னியாகுமரி போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை அவர்கள் தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை, அவர்களை கைது செய்தால் மட்டுமே தனது மகளின் உடலை வாங்குவோம் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.