“நள்ளிரவில் கழுத்தில் கடித்த கட்டு விரியன்..” எந்த தந்தைக்கும் நடக்கூடாத கொடூரம்! பணத்துக்காகவா இவ்வளவும்!?

“என்னால் வலி தாங்க முடியவில்லை, என்னை சாகடித்து விடுங்கள்” என அவர் ...
INSURANCE MURDER
INSURANCE MURDER
Published on
Updated on
2 min read

திருத்தணி அருகே அரசு பள்ளியில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்தவர் கணேசன். இவரது, இன்சூரன்ஸ் பணம் ரூபாய் மூன்று கோடியை பெறுவதற்காக இவர் பெற்ற மகன்கள் விஷப் பாம்பை ஏவி கணேசனை சாகடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் அரசு பள்ளியில் பணிபுரிந்தவர் கணேசன். வயது (56) இவர் அந்த பள்ளியில் லேப் டெக்னீஷியனாக  இருந்துள்ளார். இவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என்று இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

 இதில் மோகன்ராஜ் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். ஹரிகரன் அதே பகுதியில் டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவருகிறார். இந்தநிலையில் கணேசனுக்கு 2025 செப்டம்பர் மாதம் ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு கை, கால் முறிவு  ஏற்பட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்த சிகிச்சையின்போது, “என்னால் வலி தாங்க முடியவில்லை, என்னை சாகடித்து விடுங்கள்” என அவர் சொல்லியுள்ளார். தந்தையின் வார்த்தைகளை அவருக்கு எதிராகவே மகன்கள் பயன்படுத்துவார்கள் என அவர் கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார். கணேசன் குடும்பத்தினர், மொத்தம் பதினோரு இன்சுரன்ஸ் காப்பீடு செய்துள்ளனர். இதில், கணேசன் மீது நான்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் ரூபாய் மூன்று கோடி இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதுகடந்த ஏழு மாதங்களில் கட்டப்பட்ட தொகையாகும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டதாகும்.

 இதில் உடல் காயப்பட்டு, வீட்டிலிருந்த கணேசனை கொல்வதற்கு திட்டம் தீட்டிய இரண்டு மகன்கள் மோகன்ராஜ் மற்றும் ஹரிகரன் இதற்காக பாலாஜி திருத்தணி அருகே உள்ள மணவூர் பகுதி சேர்ந்தவர் இவரது நண்பர் தினகரன் உதவியை நாடியுள்ளனர்.  இவர்கள் கூட்டாக கணேசனை சாகடிப்பதற்கு சதி திட்டம் தீட்டி பாம்பு மூலமாக சாகடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் பாலாஜி மற்றும் தினகரன் ஆகியோர்கள் ராஜ நாகத்தை எடுத்து வந்து கணேசனின் இரு மகன்கள் உதவியுடன் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது சாகடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்து பாம்பு வேறு எங்கோ சென்றுவிட்டது. இதில் விரக்தி அடைந்த இரு மகன்களும் மீண்டும் ஒரு திட்டம் தீட்டி கட்டுவிரியன் என்று சொல்லக்கூடிய கடுமையான விஷம் கொண்ட ஒரு பாம்பை, அக்டோபர் மாதம் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர்.  உடலில் பல்வேறு இடங்களில் கடிக்க வைத்துள்ளனர். மேலும்  அவர் துடிப்பது கண்டவுடன் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

 மேலும் உடனடியாக கடிக்க வைத்த பாம்பை இரு மகன்களும் மற்றும் அவரது நண்பர்களும் அந்த பாம்பை சாகடித்துள்ளனர். சம்பவ இடத்தில் கணேசன் பாம்பு கடித்து மரணம் அடைந்தார். கணேசன் பாம்பு கடித்து விட்டது என்று இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று நாடகமாடினர்.  மருத்துவர்கள் அங்கு சோதனை செய்துவிட்டு கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். “எனது தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டார்” என்று இறந்தவரின் இரு மகன்களும் உறவினர்களிடம் நடமாடியதோடு,  பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் எங்கள் தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டார் என்று புகார் -ம் அளித்துள்ளார்.

 இதன் அடிப்படையில் பொதட்டூர்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து, விசாரணையில் இந்த வழக்கு இருந்தது.இந்த நிலையில் கணேசனின் பிரேதத்தை நல்லடக்கம் செய்து விட்டனர். மேலும்  இதில் இன்ஷூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கணேசன் அவர் மீது இருந்த மூன்று கோடியை நான்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பெறுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

அப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி, தங்கள் சந்தேகத்தை புகாராக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் அவரிடம் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இதனை அடுத்து  இந்த தனிப்படை காஞ்சிபுரம் டிஐஜி தேவராணி, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா ஆகியோர்கள் மேற்பார்வையில் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.  

 சந்தேகம் ஏற்படும் வகையில் செயல்பட்ட கணேசனின் இரண்டு மகன்கள் மோகன்ராஜ் மற்றும் ஹரிகரன் ஆகியோரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்ததில்,  பாம்புகள் வைத்து கணேசனை கொன்றதை இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 இதனை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய இவர்களது நண்பர்கள் 1) பாலாஜி, 2) தினகரன், 3) பிரசாந்த், 4) நவீன் குமார் ஆகியோர்களை பிடித்து இவர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து கணேசனை கொன்றது இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனை அடுத்து இதில் தொடர்புடைய ஆறு பேரையும் தனிப்படை பிடித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 இந்த வழக்கில் இவர்கள்தான் குற்றவாளி என்று இவர்கள் மீது சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த விசாரணை முதலில் இருந்து நடந்துவற்றை அனைத்தையும், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் பாம்பு வரவழைத்து சாகடிப்பதற்கு ரூபாய் 1.5 லட்சம் பணத்தை கூலிப்படைக்கு வழங்கியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com