selvam and chandramani 
க்ரைம்

“நான் கேட்ட மாறி தெச்சி தர மாட்டியா” - ஆத்திரத்தில் இருந்தவருக்கு கிடைத்த கத்தரிக்கோல்.. டெய்லரின் உயிருக்கு எமனானது எப்படி?

வீட்டிற்கு சென்று சந்திரமணி பேண்ட் போட்டு பார்த்தபோது இவருக்கு அது பிட் ஆகாமல் தைக்கும் முன்பு இருந்தது

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் 60 வயதான செல்வன். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில் மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.சேவல் அதே பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

செல்வத்தின் டெய்லர் கடைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையல் மாஸ்டராக வேலை செய்யும். தூத்துக்குடியை சேர்ந்த சந்திரமணி என்பவர் தனது பேண்ட்  ஆல்ட்ரேஷன் செய்ய மதியம் மூன்று மணி அளவில் செல்வத்தின் கடைக்கு வந்துள்ளார். தனது பேண்டை நீலம் குறைத்தும் தனக்கு  பிட் ஆகும் வகையில் தைத்து தர சொல்லி விட்டு ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்.

மீண்டும் மாலை 4 மணிக்கு செல்வத்தின் கடைக்கு வந்து சந்திரமணி பேண்ட் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று சந்திரமணி பேண்ட் போட்டு பார்த்தபோது இவருக்கு அது பிட் ஆகாமல் தைக்கும் முன்பு இருந்தது போலவே இருந்துள்ளது. இதனால் மீண்டும் இரவு சந்திரமணி, செல்வத்தின் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது பேண்ட் ஆல்ட்ரேஷன் செய்தது குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரி மாரி இருவரும் திட்டிக்கொண்டு நிலையில் ஆத்திரம் அடைந்த சந்திரமணி கடைக்குள் மேசையின் மீது வைத்திருந்த கத்தரிக்கோலை பயன்படுத்தி செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்ததை அடுத்து அந்த இடத்தை விட்டு எதுவும் தெரியாதது போல சந்திரமணி வெளியேறியுள்ளார்.

இரவு துணி தைக்க செல்வம் கடைக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், செல்வம் ரத்த காயத்துடன் கீழே விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து. அக்கம் பக்கத்தினர் மற்றும் தனது காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வத்தின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அங்கிருந்த cctv உதவியுடன் 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்