கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர் செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எனவே கீதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
கீதா வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50-வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவரது மகள்கள் உறங்கும் போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இளம் பெண் வெளியே செல்லும் போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் கதவில்லாத ஜன்னலை இரும்பு ஷீட் வைத்து மறைத்த இளம்பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊராரிடம் தகவல் தெரிவித்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்ட இரும்பு ஷீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த இளம்பெண் சத்தம் போடவே தர்மலிங்கம் தப்பியோடியுள்ளார்
இதையடுத்து இளம்பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மலிங்கம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்த வீடியோக்களை அழித்து வேறு யாருக்காவது இந்த வீடியோக்களை அனுப்பியுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.