க்ரைம்

“பல ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிய காதலி” - கத்தாரில் உழைத்து 12 லட்சத்தை அனுப்பிய காதலன்.. ஆட்டையை போட்டு டாட்டா காட்டிய பெண்!

தனது இதர செலவுகள் என பலமுறை ஜி பே மூலமாகவும் வங்கி வழியாகவும் சுஜினிடம் பணம் பெற்று..

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், ராமன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய சுஜின். இவர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் புஸ்பரதி தம்பதியின் மகளான 23 வயதுடைய கேத்ரின் பிளஸ்சி. இருவரும் பக்கத்து பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்திருக்கின்றனர். பின்னர் நட்பானது காதலாக மாறி இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கத்தார் நாட்டில் மீன் பிடி தொழில் செய்து சுஜின் காதலியை ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங் படிக்க வைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக கூறி கேத்ரின் பிளஸ்சி பெங்களூர் சென்றார். இந்த நிலையில் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்து கன்னியாகுமரி மாவட்டம் வள்ளி சுனை அருகே உள்ள ஒரு பெந்தேகோஸ்தே சபையில் வைத்து 2023 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து உள்ளனர். அப்போது கேத்ரின் பிளஸ்சி “ என் அக்கா திருமணம் ஆகாமல் இருப்பதால் எனக்கு திருமணம் ஆன விவகாரம் வெளியே தெரிந்தால் அவளது திருமணத்தை பாதிக்கும்” என்று கூறி இருவரும் திருமணத்திற்கு பிறகும் தனித்தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

எனவே சுஜின் கத்தார் நாட்டிற்கும், கேத்ரின் பிளஸ்சி பெங்களூருவிற்கும் சென்றனர். இதனை தொடர்ந்து பெங்களூரு சென்று தனியார் நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர்ந்த கேத்ரின் வீட்டிற்கு அனுப்ப, ரூம் வாடகை, தனது இதர செலவுகள் என பல செலவுகளுக்காக பலமுறை ஜி பே மூலமாகவும் வங்கி வழியாகவும் சுஜினிடம் பணம் பெற்று உள்ளார். இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே கேத்ரின் பிளஸ்சி அக்கா திருமணம் முடிந்த பிறகும் இருவரும் சேர்ந்து வாழ மூன்று முறை கத்தார் நாட்டில் இருந்து சுஜின் வந்த பிறகும் அதற்கு சம்மாதிக்காததால் காதலன் கேத்ரின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது கேத்ரின் பிளஸ்சி பெங்களூரில் பல ஆண் நண்பர்களிடம் பழகி வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் காதலை பல ஆண்களோடு சுற்றி திரியும் புகைப்படங்களை பார்த்த சுஜின் அவருக்கு அனுப்பிய பணத்தின் ஆவணங்கள், அவர்கள் சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட் காட்சிகள், பெந்தேகோஸ்தே சபையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம்மேலும் கேத்ரின் பிளஸ்சி வேறு ஆண் நண்பர்களோடு இருக்கும் புகைபடங்களோடு புதுக்கடை காவல் நிலையத்தில் திருமண செய்வதாக பழகி பண மோசடி செய்ததாக கேத்ரின் மீது புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனிடையே குழித்துறை நீதிமன்றத்திலும் மோசடி வழக்கு தொடர்ந்து தன் பணத்தை ,வாழ்கையை இழந்து தவிப்பதற்கு காரணமான காதலியிடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு காதலி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஜின் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.