Kanyakumari Husband Wife Attack 
க்ரைம்

“கோர்ட்லயே உன்னை வெட்டி போட்டுருவேன்” - மனைவியின் தலையில் கத்தியால் குத்திய கணவர்.. ஏழு வருட காதல் திருமணத்தில் நடந்த கொடுமை!

தொடர்ந்து அனிஷ் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு கணவரைப் பிரிந்த மேரி அபிஷா..

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், மேக்காமண்டபம் அருகேயுள்ள கிழங்குவிளை பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான மேரி அபிஷா. பட்டதாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான கார் ஓட்டுநர் அனிஷ் மார்ட்டின் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமானது முதலே கூடுதல் வரதட்சணை கேட்டு அனிஷ் மார்ட்டின், மனைவி மேரி அபிஷாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அபிஷா கர்ப்பமடைந்த இலையில் தாய் வீட்டில் தங்கி பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் குழந்தை பிறந்த பிறகு, கணவர் வீட்டிற்கு சென்ற போதும் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு கூறி அவரைத் குழந்தையை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து அபிஷா இது குறித்து கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கணவன் மனைவி இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினு தொடர்ந்து அனிஷ் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு கணவரைப் பிரிந்த மேரி அபிஷா, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், கணவர் அனிஷ் மார்ட்டினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை (அக் 28) ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மேரி அபிஷா தனது தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த அனிஷ் மார்ட்டின், குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, மேரி அபிஷாவை தலை முடி பிடித்து இழுத்து தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலையில் குத்தி, கழுத்தை அறுக்க முயற்சி செய்திருக்கிறார். இதனைத் தடுக்க முயன்ற மேரி அபிஷாவின் தாயார் மேரி நிர்மலா, சகோதரி மேரி அனுஷா மற்றும் தம்பி அருண் அஜய் ஆகியோரையும் அனிஷ் மார்ட்டின் தாக்கிக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வோவக்கறது வழக்கில் ஆஜராக வந்த மனைவியை கணவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கத்தியால் குத்திய சம்பவத்தை கூறி “மாப்பிள்ளை அவன் பொண்டாட்டிய வெட்டுனா மாதிரி கோர்ட்லயே உன்னை வெட்டி போற்றுவேன்” என கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேரி அபிஷா உள்ளிட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காகத் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மேரி அபிஷா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கொற்றிக்கோடு போலீசார், தலைமறைவான அனிஷ் மார்ட்டினைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை அனிஷ் மார்ட்டின் தாக்கிக் கத்தியால் குத்தும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கணவர் தாக்கியதாக வெளியாகியுள்ள இந்தக் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்