karaikudi kidnaping case 
க்ரைம்

“கடன் வாங்கிவிட்டு ஊரை காலி செய்த மெக்கானிக்” - நண்பர்களுடன் சென்று தகராறு செய்த பைனான்சியர்.. காரில் நடந்த கடத்தல் சம்பவம்!

பணத்தையும் செலுத்தாமல் சொல்லாமல் கொள்ளாமல் குமார் ஊரை விட்டு சென்றதால் முனீஸ்வரன்...

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உலையூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய குமார். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடை குளத்தைச் சேர்ந்த பைனாசியரான 39 வயதுடைய முனீஸ்வரனிடம் ரூ.5.50 லட்சம் கடன் வாங்கி அதனை வைத்து அதே பகுதியில் ஏசி மெக்கானிக் கடை ஒன்றை நடத்தினார். கடையில் வரும் வருமானத்தின் மூலம் மூன்று ஆண்டுகள் தவணைத் தொகையை முறையாக திருப்பி செலுத்தி வந்தார்.

கொரோனா பரவல் காலத்தில் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் குமார் தனது கடையை அடித்துள்ளார். எனவே அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் தவணை தொகையையும் காட்டாமல் இருந்துள்ளார். எனவே பிழைப்பை தேடி சொந்த ஊருக்கு சென்ற குமார், காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் சேவுக்தாவுது என்பவரது ஏசி மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வந்தார். பணத்தையும் செலுத்தாமல் சொல்லாமல் கொள்ளாமல் குமார் ஊரை விட்டு சென்றதால் முனீஸ்வரன் அவரை தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது குமார் சுப்பிரமணிபுரத்தில் உள்ள ஏசி மெக்கானிக் கடையில் பணிபுரிவதை அறிந்த பைனான்சியர் முனீஸ்வரன், நேற்று அந்த கடைக்கு அவரது நண்பர்கள் மேலப்பிடவூரைச் சேர்ந்த அரவிந்தகுமார் (27), அபிமன்யூர் (21) ஆகியோருடன் சென்று கடையில் இருந்த குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னிடம் வாங்கிய பணத்தை எப்போது திருப்பி கொடுப்பாயா என கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்துக்கு கடைக்காரர்கள் முனீஸ்வரனை கண்டித்த நிலையில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் குமாரை காரில் கடத்தி சென்றுள்ளனர். சாக்கோட்டை அருகே சென்றபோது, சாக்கோட்டை ஆய்வாளர் கணேசமூர்த்தி காரை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது கடத்தல் சம்பவம் குறித்து தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து முனீஸ்வரன், அரவிந்த்குமார், அபிமன்யூ ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் வாள், கத்தியை பறிமுதல் செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.