க்ரைம்

“இளம் பெண் முகத்தில் தூவப்பட்ட மிளகாய் பொடி” - காதல் திருமணம் செய்து கொண்டதால் கொடூரம்.. மகளையே கடத்திய பெற்றோர்கள்!

இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாலையில் பிரவீன் வீட்டின் மீது ஸ்வேதாவின் பெற்றோர் தாக்குதல் நடத்தினர்..

Mahalakshmi Somasundaram

இந்த நாட்களில் காதல் திருமணங்கள் சாதாரணமாகிவிட்டது. சில திருமணங்கள் பெற்றோரை எதிர்த்து நடக்கும், மற்றவை பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறும். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத சில பெற்றோர் காலப்போக்கில் சமரசம் செய்து கொள்வார்கள். ஆனால் சில பெற்றோர் கௌரவம் தான் முக்கியம் என்று கருதி கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் கீசராவில் நடந்துள்ளது.

கீசரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்சம்பள்ளி கிராமத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்டதால், சொந்த மகளையே பெற்றோர்கள் கடத்திச் சென்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை பிரவீன் வேடர் ஏற்றுக்கொண்ட நிலையில் ஸ்வேதாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து காதலை கைவிடுமாறு தனது மகளை கண்டித்து வந்துள்ளனர்.

எனவே ஸ்வேதா மற்றும் பிரவீன் இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரவீனின் வீட்டில் வசித்து வந்தனர். இந்தத் திருமணம் தங்களுக்குப் பிடிக்காததால் ஸ்வேதாவின் பெற்றோர், பால நரசிம்மா மற்றும் மகேஸ்வரி ஆகியோர், மகள் மீது கோபம் கொண்டிருந்தனர்.இன்று அதிகாலையில், பிரவீன் வீட்டிற்குச் சென்று உறவினர்களின் உதவியுடன் ஸ்வேதாவைக் கடத்திச் சென்றனர். பிரவீன் மற்றும் ஸ்வேதா இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாலையில் பிரவீன் வீட்டின் மீது ஸ்வேதாவின் பெற்றோர் தாக்குதல் நடத்தினர்.

ஸ்வேதாவின் கண்களில் மிளகாய் தூளை தூவி, துணியால் கட்டித் தூக்கிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து கணவர் பிரவீன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரவீன் அளித்த புகாரின் பேரில், ஸ்வேதாவின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.