karur extra marital affair murder 
க்ரைம்

“கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த அக்கா” - பார்க்க கூடாததை பார்த்த தங்கை.. கொன்று சாக்கடையில் வீசப்பட்ட பின்னணி!

வினோதினியின் தங்கையான 17 வயதுடைய தர்ஷினி, இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் காலனியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய மோகன்ராஜ். இவருக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் நெய் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வந்த 22 வயதுடைய வினோதினி என்பவர் பணியாற்றி வந்தார். மோகன்ராஜ் நெய் விற்பனை தொடர்பாக அடிக்கடி அந்தக் கடைக்கு சென்று வந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது மற்றும் வினோதினியின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். வழக்கம் போல கடந்த (ஆக 17) ஆம் தேதி, வெங்கமேடு திட்டச்சாலை பகுதியில் உள்ள வினோதினியின் வீட்டிற்கு மோகன்ராஜ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய வினோதினியின் தங்கையான 17 வயதுடைய தர்ஷினி, இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கப் போவதாகக் கூறி அவர் கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், தர்ஷினியை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தலை மோதியதில் தர்ஷினி மயக்கமடைந்ததாக தெரிகிறது.

தர்ஷினி அசைவின்றி கிடந்ததால் அச்சமடைந்த மோகன்ராஜும் வினோதினியும், இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என முடிவு செய்து, தர்ஷினியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் கட்டி, இரவு யாருக்கும் தெரியாமல் மூட்டையை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, கரூர்–வாங்கல் இணைப்புச் சாலையில் அருகே காமதேனு நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசிய விட்டு சென்றுள்ளனர்.

karur extra marital affair murder 2

இதற்கிடையில் தர்ஷினி பள்ளி முடிந்து வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, வெங்கமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அப்போது வினோதினியும் தர்ஷினியை தேடுவது போல உடன் சேர்ந்து நாடகமாடியுள்ளார். விசாரணையில் போலீசார் சில செல்போன் எண்களை கண்காணித்து வந்த நிலையில், வினோதினியின் செல்போனுக்கு மோகன்ராஜ் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் மோகன்ராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தர்ஷினி கொலை தொடர்பான தகவல்கள் வெளியாகியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு, தர்ஷினியின் உடலை மூட்டையாக கட்டி வீசியதாக கூறப்படும் கால்வாய் பகுதியை மோகன்ராஜ் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் சாக்கடை கால்வாயில் தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது கடந்த (செப் 19) ஆம் தேதி மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் தர்ஷினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சாக்கடை நீரில் சுமார் ஒரு மாதமாக இருந்ததால் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உடல் தகனம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத 17 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டு, சாக்கடை கால்வாயில் வீசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்