கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் 21 வயதுடைய வினிதா. இவர் தனது சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் விடுதியில் தங்கி பி பார்ம் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவரான 25 வயதுடைய ரஞ்சித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்களது நட்பானது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் வினிதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இனி ரஞ்சித்தை காதலிக்க வேண்டாம் என முடிவு செய்து வினிதா காதலை முறித்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வினிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விடுதியில் குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.
இதனை அறிந்த ரஞ்சித் தன்னுடனான காதலை முறித்த வினிதாவை கொலை செய்ய எண்ணி நேற்று இரவு 11.30 மணியளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து சென்ற ரஞ்சித், தனது வீட்டின் படுக்கை அறையின் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றி உள்ளார். வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய் பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் துடித்து கதறி உள்ளார். வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக வினதை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து வினிதாவின் பெற்றோர்கள் பாலவிடுதி காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது புகார் அளித்தனர். அதன் பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். கடவூர் அருகே காதலை முறித்த கல்லூரி மாணவி மீது காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய் ஊற்றியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.