

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அவரது தந்தை உயிரிழந்த நிலையில் தாயும் வேலைக்கு செல்வதால் சிறு வயதிலிருந்தே சேலை தலைவாசலில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளியின் விடுமுறை நாட்களில் பாட்டிக்கு உதவி செய்ய எண்ணிய சிறுமி ஆடுமாடுகளை காட்டிற்கு அழைத்து சென்று மேய்த்து வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அப்போது அப்பகுதிக்கு சிறுமியை போலவே ஆடுமேய்க்க வரும் சாத்தப்பாடி பகுதியில் வசித்து வரும் சேர்ந்த வீர முத்து என்பவரின் மகனான 70 வயதுடைய பெரியசாமி என்ற முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். அந்த முதியவருடன் ஆடுமேய்க்க வரும் அவரது பேரனான 16 வயதுடைய சிறுவன் அவரது தாத்தா செய்வதை தொடர்ந்து கவனித்து வந்து அதே போல சிறுவனும் அந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இது போல தொடர்ந்து தாத்தாவும் பேரனும் இணைந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிக்கு பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்திய நிலையில் தனக்கு நடந்த கொடுமை நினைத்து ஆத்திரமடைந்த மாணவி இது குறித்து ஆசிரியர்கள் இடம் தெரிவித்த நிலையில் பள்ளி நிர்வாகம் சேலம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் சேர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சாத்தப்பாடி பகுதியை சேர்ந்த பெரியசாமி அவரது பேரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமுறைவான முதியவரை தேடி வந்த நிலையில் முதியவர் நேற்று சாத்தப்பாடி பகுதிக்கு வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் முதியவர் பேரன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.