நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து, வலதுசாரி அரசியல் விமர்சகரான டி.ஜி. மோகன்தாஸ் யூடியூப் காணொளி ஒன்றில் தெரிவித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக, கேரள காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவு அவர் மீது கடந்த புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம் சைபர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மோகன்தாஸின் 'பத்ரிகா' என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், பொது அமைதியைக் குலைத்து, அச்சத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கும் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டுதல், அச்சம் அல்லது பீதியை ஏற்படுத்தி பொது அமைதியைக் குலைக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கணினி தொடர்பான குற்றங்கள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், டெல்லி மாணவர்களின் போராட்டம் "கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு வழிவகுக்கக்கூடும்" என்றும், "போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் பாலியல் வன்புணர்வை விரும்புகிறார்கள், மேலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை விரும்பும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதால் எந்தப் புகாரும் வராது" என்றும் மோகன்தாஸ் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. மேலும், "தான் பொறுப்பில் இருந்தால், ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு உத்தரவிடுவேன்" என்றும், "அவர்கள் மறுத்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவேன்" என்றும் அச்சுறுத்தும் கருத்துக்களை கூறியதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு செய்வதால் சிலர் கொல்லப்பட்டாலும் அல்லது நிரந்தரமாகக் காயமடைந்தாலும், சில மணி நேரங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சடலங்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையின்படி, முதல் தகவல் அறிக்கையானது பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 192 மற்றும் 353(1)(b), தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 மற்றும் கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவு 120(o) ஆகிய குற்றங்களை பதிவு செய்துள்ளனர். மேலும், ஜூலை 29 அன்று சைபர் காவல்துறைக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் பெறப்பட்டு, காவல் நிலைய மனுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களிடையே அச்சத்தைப் பரப்பி, பொது அமைதியைக் குலைத்து, அமைதியின்மையை உருவாக்கும் நோக்கத்துடன் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அந்தக் காணொளிகள் பதிவேற்றப்பட்டுப் பரப்பப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.