க்ரைம்

“வீட்டுக்குள் இருந்த அழுகிய சடலம்” - சலவை தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கம்.. மது கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்சாரி மற்றும் சரஸ்வதி வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது சரஸ்வதிக்கும்

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான சரஸ்வதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி மற்றும் கணேசன் தம்பதிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களை பார்த்து கொண்டு சரஸ்வதி வீட்டில் தையல் வேலை செய்து வந்துள்ளார்.

மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உடைய சரஸ்வதி, பல ஆண்களுடன் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட கணேசன் சரஸ்வதியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சரஸ்வதிக்கு சென்னை, அண்ணா நகரில் உள்ள சலவை கடையில் பணிபுரிந்து வந்த 37 வயதுடைய அன்சாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருப்பதை அறிந்த சரஸ்வதியின் கணவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த சரஸ்வதி கணவரையும் குழந்தைகளை பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுடன் சென்று, கொளத்தூரில் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்சாரி மற்றும் சரஸ்வதி வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது சரஸ்வதிக்கும் அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அன்சாரி சரஸ்வதியிடம் “இன்னும் எத்தனை பேர் கூட தான் பேசிட்டு இருக்க” எனக் கேட்டு சரஸ்வதியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார். சரஸ்வதி உயிரிழந்ததை உறுதி படுத்திய அன்சாரி அவரது உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அண்ணா நகர் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த (ஜூலை 21) தேதி சரஸ்வதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அக்கம் பக்கத்தினர் அன்சாரியை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அன்சாரியை தேடிவந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். பூட்டிய வீட்டுக்குள் இருந்து பெண்ணின் அழுகிய சடலம் கைப்பற்ற பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.