“தாய் இறந்ததால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்” - பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை.. அதிரடி நடவடிக்கை எடுத்த குழந்தைகள் நல அலுவலர்!

தனது வளர்ப்பு தந்தையான மூர்த்தியுடன் சிறுமி வளர்ந்து வந்துள்ளார். மனைவி இறந்த பிறகு மூர்த்தி சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது
vaniyampadi pocso arrest news in tamil
vaniyampadi pocso arrest news in tamilAdmin
Published on
Updated on
1 min read

வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 55 வயதான கட்டிட மேஸ்திரி மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா(பெ.மா) என்பவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்தின் போது இறந்ததால், அவரது குழந்தையை மூர்த்தி மற்றும் மஞ்சுளாவிற்கு தத்து கொடுத்துள்ளனர். அக்குழந்தையை சிறுவயது முதலே தனது சொந்த குழந்தை போல மஞ்சுளாவளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அக்குழந்தையானது வளர்ந்து தற்போது அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தாய் மஞ்சுளா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனது வளர்ப்பு தந்தையான மூர்த்தியுடன் சிறுமி வளர்ந்து வந்துள்ளார். மனைவி இறந்த பிறகு மூர்த்தி சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற போது, அங்கு சிறுமி மிகுந்த சோர்வுற்று காணப்பட்டுள்ளார், இதனை கண்ட ஆசிரியர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சாதனா , மூர்த்தி மீது வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வளர்ப்பு மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com