13-year-old girl’s family arrested 
க்ரைம்

துப்பாக்கி முனையில் மிரட்டல்.. ஆடைகளைக் களைந்து நிர்வாண ஊர்வலம்! காதல் விவகாரத்தில் அரங்கேறிய உச்சகட்ட கொடூரம் - வைரல் வீடியோவின் பின்னணி

மூவரையும் வெளியே இருந்த சந்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நிர்வாணமாக ஊர்வலம் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத சம்பவத்தில், தென்மேற்கு கொல்கத்தாவின் சர்சுனாவில், 18 வயது இளைஞர், அவரது தந்தை மற்றும் 19 வயது நண்பர் ஆகியோர், அவரது காதலியின் குடும்பத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாகவும், ஆடைகள் களையப்பட்டதாகவும், மேலும் நெரிசல் மிகுந்த தெரு வழியாக 50 மீட்டருக்கும் மேலாக நிர்வாணமாக ஊர்வலம் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 25 அன்று குதிராம் பள்ளி பகுதியில் உள்ள கல்பார் மடம் அருகே, அந்த இளைஞர் தன்னுடைய காதலிக்கு முத்தமிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த மோசமான செயல் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மற்ற குடியிருப்பாளர்கள், முக்கிய சந்தேக நபர்களின் வீட்டைச் சேதப்படுத்தியதுடன், வழக்கைக் கையாள்வதிலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து அதை மறுத்துள்ளனர். மேலும், அந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது தாய்மாமன் உட்பட இதுவரை மூன்று பேர் கைது செய்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அப்பெண்ணின் குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே இந்தக் காதல் உறவை எதிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த 18 வயது இளைஞர் இந்த சிறுமியை முத்தமிட்டதை அந்த சிறுமியின் உறவினர் நேரில் பார்த்ததை அடுத்து நிலைமை கைமீறி சென்றுள்ளது. அந்த பின்னர், அந்த இளைஞரும் அவரது நண்பரும் அப்பெண்ணின் வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, ஓர் அறைக்குள் பூட்டப்பட்டுள்ளனர். பின்னர் இருவரும் அந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய்மாமனால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதோடு மட்டும் அந்த சிறுமியின் வீட்டார் நின்றுவிடவில்லை, அச்சிறுமியின் குடும்பத்தினர் அந்த இளைஞனின் தந்தையை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தந்தை, தனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மூவரையும் ஒரு அறையில் அடைத்து, பின்னர் பலர் முன்னிலையில் அந்த இளைஞனின் தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பிறகு, தொடர்ந்து இப்படி அடித்துக்கொண்டே இருந்ததால் மூன்று பேரும் இறந்து விடுவார்கள் என்று அஞ்சி, இளைஞனின் தந்தைக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளார்கள். அந்த வாய்ப்புகளாவன, 1) மகனை துப்பாக்கியால் கொல்வது, 2) துப்பாக்கியை பயன்படுத்தவில்லை என்றால் கத்தியை பயன்படுத்துவது, 3) இல்லை என்றால் நிர்வாணமாக நடப்பது என்று கொடூரமான மூன்று வாய்ப்புகளை அந்த தந்தைக்கு அளித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணின் தாய், கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கி அந்த இளைஞனின் தந்தையிடம் கொடுத்ததாகவும், அதை கொண்டு அவரது மகனின் வயிற்றில் குத்தவேண்டும் என்றும் நிபந்தனை வைத்துள்ளார். இந்நிலையில், தன் மகனை காப்பாற்றுவதற்காக தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் அதனால், ஆடையைக் களைய ஒப்புக்கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று அந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்ததாகவும், இந்த விவகாரத்தில் தலையிட முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தின் காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மூவரையும் வெளியே இருந்த சந்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நிர்வாணமாக ஊர்வலம் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் ஆதரவு இருப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்