school student suicide issue  
க்ரைம்

“100 போன் செய்து லவ் டார்ச்சர் கொடுத்த மாணவன்” - மன உளைச்சலில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. தூது போனவருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த சூர்யா அவர் பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை செய்து வந்திருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே எம்.தொட்டி கிராமத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி பவித்ரா நேற்று(செப் 27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கவனித்த அவரது பெற்றோர்கள் உடனடியாக அவரை மீது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த சிறுமிக்கு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவன் சூர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த சூர்யா அவர் பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை செய்து வந்திருக்கிறார்.

மேலும் சிறுமியின் நம்பருக்கு மெசேஜ் அனுப்பியும் தினமும் போன் செய்து தன்னை காதலிக்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மாணவியின் வீட்டிற்கு அருகே வசிக்கு வேறு ஒரு கல்லூரி மாணவனும் சூர்யாவை காதலிக்குமாறும் அவருடன் பேச வேண்டும் என்றும் மாணவியை வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உலகாய்ச்சல் அடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாணவியின் தந்தை இரு சிறுவர்கள் மீதும் சூளகிரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காதலித்து வந்த 18வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 17வயது சிறுவனை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் கைது செய்துள்ள நிலையில் மற்றொருவனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சூளகிரி காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மாணவி தூக்கிட்டு இறந்த நாளன்று சூர்யா மாணவிக்கு சுமார் 100 முறை போன் செய்தது தெரியவந்துள்ளது. காதல் தொல்லையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்