கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் 48 வயதுடைய வெண்ணிலா. இவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போச்சம்பள்ளி போலீசார் தற்கொலைக்கான காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெண்ணிலாவிற்கும் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கும் கடந்த ஜல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ் உடல்நலக்குறைவால் இறந்து விட, வெண்ணிலா போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தில் தனது குழந்தைகளுடன் தங்கி வசித்து வருகிறார். மேலும் போச்சம்பள்ளியில் லட்சுமி ஹைடெக் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகிறார். பியூட்டி பார்லரில் வெண்ணிலாவிற்கு துணையாக ராசி நகர் பகுதியை சேர்ந்த சம்ரா என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக சம்ரா வெண்ணிலாவுடனே குடும்பத்தில் ஒருவர் போல பழகி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சம்ரா தனது கணவரான சிராஜுதினுக்கும் வேலை வேண்டும் என கேட்டதன் பேரில் அவரை வெண்ணிலா தனது காருக்கு டிரைவராக வேலைக்கு சேர்த்து கொண்டார். மேலும் அந்த பகுதியிலேயே வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து அதில் சிராஜுதின் மற்றும் அவரது மனைவி சம்ரா ஆகியோரை தங்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பியூட்டி பார்லர் சம்பந்தமாக பல்வேறு பகுதிகளுக்கு டிரைவர் சிராஜுதின் மற்றும் உரிமையாளர் வெண்ணிலா மட்டும் சென்று வந்துள்ளனர்.
அப்போது வெண்ணிலாவிற்கும், சிராஜுதினுக்கும் இடையே இருந்த பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மேலும் இருவரும் அவ்வப்போது வெளியே சென்று அறை எடுத்து மது அருந்துவதும், தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையெல்லாம் சிராஜுதின், வெண்ணிலாவிற்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகிய உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த மாரி கிருஷ்ணன் என்பவரை பிள்ளைகள் சம்மதத்துடன் வெண்ணிலா 2வது திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் சிராஜுதினுடன் உள்ள பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சாமாக குறைத்து கொண்ட வெண்ணிலா,சிராஜுதினை டிரைவர் வேலையை மட்டும் பார்க்க கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிராஜுதின், வெண்ணிலாவை மிரட்டுவதற்காக வெண்ணிலாவுடன் தனிமையில் இருந்த மற்றும் மது அருந்தும் வீடியோக்களை, பியூட்டி பார்லரில் வேலை செய்யும் உஷா என்பவரிடம் காட்டி, “உங்க முதலாளி அம்மாவ பேரு, அவங்க சரியில்லை, அவங்க கேரக்டர் பாரு” எனக் கூறியுள்ளார். இதனை உஷா தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். எனவே வெண்ணிலா உடனடியாக சிராஜுதின் மற்றும் அவரது மனைவி சம்ரா ஆகியோரை அழைத்து “நீங்க இனிமேல் வேலைக்கெல்லாம் வராதீங்க” எனக்கூறி வேலையை விட்டு அனுப்பியுள்ளார்.
பின்னர் சில தினங்கள் கழித்து வெண்ணிலாவிற்கு போன் செய்த சிராஜூதின், என்னிடம் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். பயந்து போன வெண்ணிலா தெரிந்த சிலர் மூலம் சிராஜுதினை அழைத்து, பேரம் பேசியுள்ளார். பேரத்திற்கும் சிராஜூன் ஒத்துவராத நிலையில் கடந்த 4ம் தேதி காலை வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வெண்ணிலா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையெடுத்து சிராஜூனை கைது செய்த போச்சம்பள்ளி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.