க்ரைம்

“தொடர்ந்து ஒரே பாணியில் நடந்த கொலைகள்” - பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்கள்… நஷ்டத்தில் மிருகமான ரவி பிரசாந்த்!

ஆத்திரம் அடைந்த ரவி பிரசாந்த் ரெட்டி அவரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை தமிழக எல்லையான...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான பொம்ம சந்திரா பகுதியில் வசித்து வருபவர் ரவி பிரசாத் ரெட்டி, இவர் அப்பகுதியில் சீட்டு பணம் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். சீட்டு போட்டவர்கள் சரிவர பணம் காட்டாமல் இருந்ததால் ரவி ப்ரசாந்த்திற்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய பணம் அதிகமாக தேவைப்பட்ட நிலையில், பணம் படைத்தவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார். அதன்படி கடந்த 4 ஆம் தேதி அங்குள்ள கித்தனஹள்ளி என்ற பகுதிக்கு சென்ற ரவி பிரசாத் ரெட்டி அவருக்கு நன்கு தெரிந்த மாதேஷ் என்பவரிடம் தனது நிலையை சொல்லி பணம் கேட்டுள்ளார்.

ஆனால் மாதேஷ் அவருக்கு பணம் தர மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவிபிரசாந்த் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய ஹெப்பகோடி போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து ரவி பிரசாத் ரெட்டி பணத்திற்காக கடந்த (நவ 06) ஆம் தேதி தொழிலதிபரான பாலப்பாரெட்டி என்பவரை கடத்தி வைத்துக்கொண்டு வேறொரு போன் மூலம் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகைரளித நிலையில் பணம் எதுவும் கொடுக்காமல் சாமாளித்து வந்துள்ளனர். கேட்ட பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த ரவி பிரசாந்த் ரெட்டி அவரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள சானமாவு என்ற வனப்பகுதியில் வீசி சென்றுள்ளார். பாலப்பா ரெட்டி கடத்தல் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்த நிலையில் குற்றவாளி ரவி பிரசாத் ரெட்டி என்பது தெரியவந்தது.

மேலும், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பல வருடங்களாக கர்நாடகாவில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. ரவி பிரசாத் ரெட்டி தான் பணத்திற்காக மாதேஷ் மற்றும் பாலப்பா ரெட்டி ஆகிய இருவரையும் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் ரவிபிரசாந்தை கைது செய்ய சென்றபோது அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் தலைமை காவலர் அசோக் என்பவர் காயமடைந்தார் இன்ஸ்பெக்டர் சோம சேகர் பாதுகாப்புக்காக வானத்தில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அவரை பிடிக்க முயன்றுள்ளார் ஒரு கட்டத்தில் ரவி பிரசாத் ரொட்டியின் இரண்டு கால்களிலும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்துள்ளனர். காயம் அடைந்துள்ள குற்றவாளி ரவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.