“தொட்டு மட்டும் தான பாத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க” - மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெக்னீசியன்கள்!

இருப்பினும் கல்லூரி நிர்வாகம் இன்று வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்...
“தொட்டு மட்டும் தான பாத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க” - மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெக்னீசியன்கள்!
Published on
Updated on
2 min read

புதுச்சேரி மாநிலம், கனக செட்டிகுளம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக செல்லும்போது, அங்கு எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரியும் சரவணன் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தேவையற்ற இடங்களில் தொடுவது, அநாகரிகமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் உள் புகார் குழுவிடம் புகாரளித்ததை தொடர்ந்து 60 நாட்களில் குழு உரிய விசாரணையை நடத்தி நிர்வாகத்திடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளது. இருப்பினும் கல்லூரி நிர்வாகம் இன்று வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த டெக்னீஷியன்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் பணிபுரியும் ஜூலி அசோக் என்பவர் “தொட்டு மட்டும் தான பாத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க” என கேட்டுள்ளார்.

Admin

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இது குறித்து கல்லூரி மேலிடத்தில் பேச வேண்டும் என கூறிய போது கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மாணவர்களை அழைக்களித்து வந்திருக்கிறது. மேலும் இந்த பிரச்சனை வெளியே தெரியாதவாறு கல்லூரி நிர்வாகம் பல மாதங்களாக முடி மறைத்து வந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து மாணவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என கல்லூரி விடுதியை காலி செய்ய சொல்லியும் கல்லூரிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் பிரச்சனையை திசை திருப்பி வருகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Admin

இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எக்ஸ்ரே டெக்னிசியன் ஊழியர்கள் இரண்டு பேரை உடனடியாக பணி நீக்கம் செய்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரியில் படிக்கும் செவிலியர், பிசியோதரப்பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வாளக வாயலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com