கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை மருமகன் சுத்தி மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணன்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 கீர்த்தனா. இவருக்கும், பர்கூர் பகுதியைச் சேர்ந்த உதய கிருஷ்ணனின் மகன் 32 32 வயதுடைய சந்திரசேகரன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இதற்கிடையே, கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தகல்வல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தனா தனது பெற்றோருடன் கண்ணன்ட அள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (அக் 26) கீர்த்தனாவின் மகனுக்கு பிறந்தநாள் என்பதால் இரவு மகனை சந்திப்பதற்காக சந்திரசேகரன் வந்துள்ளார். அப்போது, கீர்த்தனாவின் தந்தை “விவாகரத்து கேட்ட பிறகு நீ எதுக்கு வந்த” எனக்கு கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்திரசேகரன் அங்கிருந்த சுத்தி மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையே, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாமனாரை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் சந்திரசேகரனைத் தேடி வருகின்றனர். மருமகன் வீட்டிற்குள் வைத்து மாமனாரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்