கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இருவருக்கும் கானகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணமாகி 4½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் லோகநாதன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என கூறப்படுகிறது.
விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டபூர்வமாக விவாகரத்து பெறாமல் லோகநாதன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சென்னை ஈசிஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியில் தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கனகா கூறினார். கனகா பலமுறை கணவர் லோகநாதனிடம் நியாயம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கனகா அவரது குழந்தையுடன் கணவர் வசிக்கும் சென்னை கொட்டிவாக்கம் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு லோகநாதன், அவரது 2-வது மனைவியான வேறு ஒரு பெண்ணுடன் ஒன்றாக இருந்ததை பார்த்து இருவரையும் கையும் களவுமாக கனகா பிடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வீட்டை வெளிப்புறமாக பூட்டி இருவரையும் உள்ளேயே வைத்து பூட்டிய கனகா, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை போலீசார் ஏற்கனவே எங்கு புகார் அளித்தீர்களோ அங்கிருந்தே போலீசாரை அழைத்து வர வேண்டும் எனக் கூறியதால் அதிருப்தியடைந்த கனகா குழந்தையுடன் அங்கேயே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். நீலாங்கரை போலீசாரின் அலட்சிய பேச்சால் நியாயம் கேட்ட பெண் அவரது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளிய நீலாங்கரை போலீசாரின் செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இந்த இரண்டாவது திருமணம் குறித்து அடையார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பெண்ணின் தர்ணா போராட்டத்தை அடுத்து நீலாங்கரை போலீசார் லோகநாதன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் பெண் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் லோகநாதன் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும், அவரும் விவாகரத்து பெறாமலேயே லோகநாதனுடன் சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து சென்னையில் குடும்பம் நடத்தி வந்ததை வெளிநாட்டில் இருந்து அவரது முதல் மனைவி விமானத்தில் பறந்து சென்னை வந்து கணவனை கையும் களவுமாகப் பிடித்து வீட்டைப் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.