கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம் சங்கரி கோப்பா கிராமத்தை சேர்ந்தவர் சரத் நீலப்பா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் தனது தங்கையுடன் பயிலும் சிந்து என்பவருடன் சரத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
காதலித்து வந்த நேரங்களில் சரத் சிந்துவுடன் அன்பாக இருந்த நிலையில் இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் வெளியில் ஊர் சுற்றி வந்திருக்கின்றனர். மேலும் “நான் உன்ன மட்டும் தான் டி கல்யாணம் பண்ணிக்குவேன்” என நம்பிக்கை வார்த்தைகளை கூறி பலமுறை சிந்துவுடன் தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக சிந்து கர்ப்பமடைந்துள்ளார். இதனை அவரது காதலனை சரத்திடம் கூறிய போது அவர் “இந்த குழந்தை நமக்கு வேண்டாம் கலைத்து விடு” என தெரிவித்த நிலையில் சிந்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சரத் சிந்துவை திருமணம் செய்து கொள்ள மறுத்த நிலையில் சிந்து இது குறித்து தனது தோழியான சரத்தின் தங்கை காவியாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட காவியாவும் சிந்துவை கருவை கலைக்க சொல்லி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் சரத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலரும் சிந்துவை தகாத வார்த்தைகளால் பேசி கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சிந்து தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்துள்ளார்.
அதன்படி நேற்று காலை அவரது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் சிந்துவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவமனையில் சிந்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிந்துவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை சரத்தின் வீட்டின் முன்பு போட்டு சரத் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்ய போராட்டம் நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிந்துவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சரத், அவரது தாய், தங்கை மற்றும் உறவினர்கள் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் 11 பிறையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.