க்ரைம்

“கர்ப்பிணி மகளை அடித்து கொன்ற தந்தை” - மாற்று சமூக வாலிபரை காதலித்ததால் நடந்த கொடூரம்!

மகள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்து ஆத்திரமடைந்த பிரகாஷ் கௌடா...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி மாவட்டம் இனாம் வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மான்யா. இவர் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் பயின்று வந்ததாக சொல்லப்படுகிறது. மான்யாவும் அதே அப்பகுதியை சேர்ந்த விவேகானந்தா என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. விவேகானந்தா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மான்யா வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துகின்றனர். இருப்பினும் இருவரும் தகாலத்தை காதலை கைவிடாமல் இருந்திருக்கின்றனர்.

எனவே மான்யா மற்றும் விவேகானந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் வீட்டை வெளியேறி சென்று திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர் . பின்னர் இவர்களது திருமணத்தை விவேகந்தாவின் பெற்றோர்கள் ஏற்று கொண்ட நிலையில் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கின்றனர். மகள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்து ஆத்திரமடைந்த பிரகாஷ் கௌடா விவேகானந்தா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார்.

மேலும் அவ்வப்போது விவேகானந்தா வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. மான்யா ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நேற்று வழக்கம் போல விவேகானந்த வீட்டிற்கு சென்ற பிரகாஷ் கௌடா அவர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தகராறு பெரிதாகிய நிலையில் பிரகாஷ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மான்யா மற்றும் விவேகானந்தா குடும்பத்தினரை கம்பி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களை விலகி விட்ட லாக்கப் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஆறு மாத கர்ப்பிணியான மான்யா தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை அடித்து கொலை செய்த தந்தையை கைது செய்திருக்கின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கர்ப்பிணி என்றும் பாராமல் தந்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.