Luxury yacht sexual assault 
க்ரைம்

“மனைவிக்கு தெரியக்கூடாது.." - 22 வயது பெண் ஊழியரை மது கொடுத்து சீரழித்த 54 வயது நபர்! உடலில் இருந்த காயங்களால் அதிர்ந்த இளம்பெண்

தன் மனைவியின் தோழி ஒருவருடன் “ஒருமுறையாவது நெருங்கிப் பழக” விரும்புவதாகவும் அந்த இளம்பெண்ணிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

அமெரிக்கா: தனது மனைவியும் மகனும் ஆடம்பரமான தீவிலிருந்து புறப்பட்டுச் சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், நான்டக்கெட் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தனது சொகுசுப் படகில் ஒரு இளம் பெண் ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

54 வயதான கிறிஸ்டியன் பிராட்லி வில்லியம்ஸ், தனது மனைவி, 2 வயது மகன் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர் ஆகியோர் புளோரிடாவுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே, ஆகஸ்ட் 9 அன்று தனது படகில் இருந்த 22 வயதுப் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை (04.09.2026) அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அடையாளம் வெளியிடப்படாத அந்த இளம்பெண், வில்லியம்ஸின் “சிமெரா” என்று பெயரிடப்பட்ட சொகுசுப் படகில் தங்குமிடத்திற்கு ஈடாக, கடந்த ஜூன் மாதத்தில்தான் ஒரு பணியாளராக தனது வேலையை தொடங்கினார்.

தனது குடும்பம் கப்பலில் இருந்து இறங்கிய பின்னர், வில்லியம்ஸ் மாலை 4:15 மணியளவில், "நான் ஒரு நல்ல இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன், அதனால் ஒரு நல்ல ஆடையை அணிந்துகொள்ளுங்கள்" என்று அந்த 22 வயது பெண் ஊழியரிடம் கேட்டதாகக் காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்டியன் அந்தப் பெண்ணை அந்த உடையில் பார்த்தபோது, ​​'வாவ், நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும், வில்லியம்ஸ் அந்தப் பெண்ணிடம், “நாம் இரவு உணவிற்கு வெளியே செல்வது என்னுடைய மனைவிக்கு தெரியக்கூடாது” என்று கூறியதாகவும், பின்னர் தன் மனைவியின் தோழி ஒருவருடன் “ஒருமுறையாவது நெருங்கிப் பழக” விரும்புவதாகவும் அந்த இளம்பெண்ணிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இரவு முழுவதும், வில்லியம்ஸ், அந்த இளம்பெண்ணிடம் தகாத ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர், அன்றைய தினம் இரவு சுமார் 8 மணியளவில், அந்த பெண் ஊழியர் கிறிஸ்டியன் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து மிகவும் பதட்டமடையத் தொடங்கியுள்ளார். உடனடியாக, அவர் கிறிஸ்டியனிடம் 'நான் இப்போது திரும்பிச் செல்ல விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். ஆனாலும், கிறிஸ்டியன் அதற்கு உடன்படவில்லை. மேலும், தனது மனைவி தான் செலவு செய்யும் பணபரிவர்தனைகளி பார்க்கக்கூடும் என்பதால் அந்த பெண் ஊழியரை உணவிற்கான கட்டங்களை வழங்கக்கூறியுள்ளார்.

வில்லியம்ஸ் அந்தப் பெண்ணை மீண்டும் ஒருமுறை மது அருந்த வெளியே தன்னுடன் வருமாறு வற்புறுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரோ, தான் பணியில் இருந்தபோது தங்கியிருந்த படகிற்கே திரும்பிச் செல்ல விரும்புவதாக வில்லியம்ஸிடன் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் படகிற்குத் திரும்பியதும், அந்தப் பெண் வில்லியம்ஸிடம் இரவு சுமார் 8:30 மணிக்கு உறங்கச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வில்லியம்ஸோ, இருவரும் சேர்ந்து இன்னும் ஒரு முறை மது அருந்த வேண்டும் என்பதில் "மிகவும் விடாப்பிடியாக" இருந்து வரை அழைத்துள்ளார். பின்னர் அந்த பெண் கட்டாயத்தின் பேரில் அவருடன் மது அருந்தியுள்ளார்.

வில்லியம்ஸ் கொடுத்த அந்த மதுவை கொடுத்த உடனேயே அந்த 22 வயது பெண்ணுக்கு கடுமையான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், சுயநினைவை இழந்ததாகவும் அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு வில்லியம்ஸ் ஒரு அறைக்கு அழைத்து சென்று அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆவணத்தின்படி, அந்தப் பெண் கண்விழித்தபோது, ​​தன் உடலில் பாலியல் வன்கொடுமைக்கான தடயங்களைக் கவனித்துவிட்டு, அந்தப் படகை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் கப்பல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அந்த பெண் வந்திருந்த போது பணத்தேவை ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, வில்லியம்ஸின் சொகுசுப் படகில் இருந்த, தளப் பணியாளருக்கான தங்குமிட வசதி கொண்ட வேலை வாய்ப்புடன் ஷாபிரோ என்பவர் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து, அந்தப் பெண் ஷாபிரோவிடம் கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர் நான்டக்கெட் காட்டேஜ் மருத்துவமனைக்கு நடந்து சென்று, பாலியல் வன்கொடுமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பல வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1-ம் தேதி, மாசசூசெட்ஸ் மாநில காவல்துறை தடயவியல் ஆய்வகத்திலிருந்து வந்த மருத்துவமனைப் பரிசோதனையின் முடிவு என்பது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதிப்படுத்தியது.

அதன் பின்னர், வில்லியம்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 9 அன்று நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்புணர்வு தொடர்பாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்ற பத்திரிகைகள் கூறுகின்றன. முகநூல் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளின்படி, அமெரிக்கக் கடற்படையுடன் தொடர்புகளைக் கொண்டவரும், முன்னர் நீர்மூழ்கிக் கப்பலின் தளபதியாக இருந்தவருமான வில்லியம்ஸ், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். தற்போது இது குறித்த தீவிர விசாரணை நடந்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்