madhavaram pocso accused arrest 
க்ரைம்

குடும்பத்தோட இருக்கும் போதே இப்படியா? மின்சார தடையால் நடந்த அத்துமீறல்.. கையும் களவுமாக சிக்கிய காமேஷ்!

இது போல பலமுறை பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

Mahalakshmi Somasundaram

சென்னை மாதவரம் பகுதியில் தபால்பேட்டி பகுதியில் நேற்று இரவு மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாததால் தூங்கமுடியாமால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

அப்பகுதியில் சுமார் 10 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் ரமேஷ் என்றவர் வெப்பம் தாங்கமுடியாமல் காற்றோட்டமாக வெளியில் உறங்குவோம் என தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டிற்கு வெளியில் படுத்து உறங்கியுள்ளார்.

அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த காமேஷ் என்ற 53 வயதுடைய கூலி தொழிலாளி, வீட்டிற்கு வெளியில் உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மனைவியின் அருகில் சென்று அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்த ரமேஷின் மனைவி கூச்சலிடவே ரமேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் காமேஷை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் காமேஷிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் இது மட்டும் அல்லாமல் இது போல பலமுறை பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்