Admin
க்ரைம்

“வம்புக்கிழுத்து வெட்டிய கும்பல்” - ஹோட்டலில் கொலை செய்து உடன் இருந்தவர்களுக்கு மிரட்டல்.. நள்ளிரவில் காரில் தப்பிய 5 பேர்!

இந்த கும்பல் அவரிடம், தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கபாண்டியனுக்கு அந்த கும்பலுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில்

Mahalakshmi Somasundaram

மதுரை மாட்டுத்தாவணி பழ சந்தையில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருபவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தங்கபாண்டி, இவர் இரவு பணிக்காக மார்க்கெட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அருகிலிருந்த உணவகத்திற்கு உணவருந்த சென்றிருந்த நிலையில், இவரை தேடி காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மார்க்கெட்டில் இருந்தவர்களிடம் தங்கபாண்டி குறித்து விசாரித்துள்ளனர். நீண்ட நேரமாக அதே பகுதியில் சுற்றி திரிந்த அந்த கும்பல் தங்கபாண்டியனை கண்டுபிடித்துள்ளனர்.

தங்கபாண்டியன் உணவருந்த சென்ற உணவகத்திற்கு சென்று, இந்த கும்பல் அவரிடம், தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கபாண்டியனுக்கு அந்த கும்பலுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பயன்படுத்தி தங்கபாண்டியனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தங்க பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை மிரட்டி விட்டு காரில் இந்த கும்பல் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தங்கபாண்டியன் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட தங்க பாண்டியன் மீது மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல குற்றங்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்