
மதுரை வளையன்குளம் பகுதியில் நேரத்து பெய்த கனமழையில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒரு சிறுவன் இரண்டு மூதாட்டிகள் என்று மூவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளையன் குளம் முத்தாலம்மன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான அம்மா பிள்ளை இவரும், இவரது மகன் வழி பேரனுமான 10 வயதான வீரமணி மற்றும் அம்மாபிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரரான 55 வயதான வெங்கட்டி என்பவரையும் இரவு 7 மணியளவில் அம்மாபிள்ளையின் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மலை 6 மணியில் இருந்து அப்பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் அம்மாபிள்ளையின் வீட்டு குறை எதிர்பாராத விதமாக இடிந்து மூவரின் மீட்டும் விழுந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வெங்கட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அம்மாபிள்ளையும் வீரமணியும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களும் சிசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்