சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் பயண செலவு குறைவு என்பதாலும், நேரத்தை சேமிக்கும் பொருட்டும் பெரும்பாலும் புறநகர் பறக்கும் ரயில்களிலேயே பயணிக்கின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் புறநகர் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறு கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) அன்று மதியம் 3 மணியளவில் பயணிகளுடன் சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு சென்ற புறநகர் பறக்கும் ரயிலில் பயணித்த 30 வயது ஆண் பயணி ஒருவர் ரயில் திருவான்மியூர் நிறுத்தத்திற்கு சென்ற போது ரயிலில் இருந்த பெண் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
பெண்கள் பார்க்கும் வகையில் அமர்ந்து தேவையற்ற மற்றும் அருவருப்பான செயல்களை செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்த பெண் பயணி ஒருவர் வீடியோவை வெளியிடவே அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அவ்வாறு பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை காவல்துறையினர் (ஜூன் 30) தேதி கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக ரயில்வே போலீசார் உரிய முறையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு, பெண்களை பாதுகாக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.