Child abuse Child abuse
க்ரைம்

"இதுவரை இல்லாத சிறந்த உடலுறவு" - குழந்தைகளை சீரழித்த குற்றவாளியில் வாக்குமூலம் "1,600 ஆபாசப் படங்களைக் கண்டறிந்த புலனாய்வாளர்கள்!"

ஸ்னாப்சாட் மூலம் ஏழு சிறுவர்களைச் சுரண்டி , அவர்களில் 12 வயதுடைய இருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

Vinvizhi Leninton

12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை "இதுவரை இல்லாத சிறந்த உடலுறவு" என்று அதிர்ச்சியூட்டும் வகையில் வர்ணித்த, கிழக்கு லண்டனைச் சேர்ந்த குழந்தை பாலியல் குற்றவாளி ஒருவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 வயதான பார்த்திமாஸ் எஹிமெரே, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் , ஸ்னாப்சாட் மூலம் ஏழு சிறுவர்களைச் சுரண்டி , அவர்களில் 12 வயதுடைய இருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது 12 முதல் 16 வயதுக்குட்பட்ட ஏழு பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய 47 சிறுவர் பாலியல் குற்றங்கள் செய்த குற்றத்திற்காக, ஸ்னேர்ஸ்ப்ரூக் கிரவுன் நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

மேலும், எஹிமெரே வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். 2019 ஜூலை மாதம் ஒரு சிறுவன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்கள், ஒரு குழந்தையைப் பாலியல் நடவடிக்கைக்குத் தூண்டிய குற்றம் மற்றும் பாலியல் ரீதியிலான தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ் பிரவுன் கே.சி. நீதிமன்றத்தில், எஹிமெரே அடையாளம் தெரியாத மற்றொரு குழந்தைப் பாலியல் குற்றவாளியுடன் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும், அதில் 12 வயது சிறுமியின் பாலியல் வன்புணர்வை "இதுவரை இல்லாத சிறந்த உடலுறவு" என்று வர்ணித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்ரேயில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு எஹிமெரே ஒரு பாதிக்கப்பட்டவரை எப்படி ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றார் என்றும், அங்கு ஒரு மரக்கிளையின் மீது வைத்து அந்தச் சிறுவனை பாலுறவில் ஈடுபடக் கட்டாயப்படுத்திய பின்னர், அவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்றும் அவர் விளக்கியுள்ளார். எஹிமெரின் கைபேசியில் புலனாய்வாளர்கள் 1,600 ஆபாசப் படங்களைக் கண்டுபிடித்துள்ளனர். "ஸ்னாப்சாட்டில், இளம் பதின்வயது சிறுவர்களிடமிருந்து பாலியல் தன்மை கொண்ட படங்களைக் கேட்டு அவர் பரவலாக விளம்பரம் செய்ததற்கு ஏராளமான உதாரணங்கள் இருந்தன," என்றும் கூறப்படுகிறது.

சமூக ஊடகத் தளம் வழியாக, சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களையும் அருவருப்பான படங்களையும் விநியோகித்து, அவர்களுக்கு இழைத்த பாலியல் செயல்களை மீண்டும் செய்து காட்டுமாறு கோரியபோது எஹிமெரேவுக்கு 19 வயது என்பதை நீதிமன்றம் அறிவித்தது. மேலும், சர்ரேயில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு சிறுவனை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக எஹிமெரே தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.