உலகில் உள்ள மனிதர்களை நாம் நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். இதற்கு இடைப்பட்ட இடத்தில் தான் ஏறத்தாழ எல்லா மனிதர்களும் வாழ்கின்றனர். எல்லா மனிதர்களுக்கும் வெளியில் ஒரு முகமும் உள்ளூர ஒரு முகமும் உண்டு. சில தயக்கம், சமூக கட்டுப்பாடுகளால் மனிதர்கள் புதைத்து வைத்திருக்கும் முகம், வெளிப்படும்போது மிக கோரமான சம்பவங்களை இந்த உலகம் சந்திக்கிறது.
மேலும் திருமணத்தை மீறிய உறவுகள் சில நேரங்களில் மிக மோசமான வன்முறைக்கு இட்டுச்சென்றுவிடுகின்றன. அதிலிருந்து ஒருபோதும் தப்ப இயலுவதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அடித்து கொன்ற நபர் 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் என்பவர் முன்னாள் ராணுவ வீராக இருந்தவர். இவரது மனைவி ராணி. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசியது போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது விபரீத ஆசையால், தனக்கு இப்படி ஒரு துன்பம் நேரும் என ராணி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
ராணிக்கு அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராணியின் கணவர் இவர்களை கண்டிக்கவே, கடந்த 2000 -ம் ஆண்டில் ராணி, நல்லதம்பியுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டுபோயுள்ளார். இதனால் நல்லதம்பி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார், இதனால் தொடர்ந்து ராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருநாள் வாக்குவாதம் முற்றவே ராணியை, கட்டையால் தலையில் அடித்து நல்லதம்பி கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு உடனே தப்பியோடி தலைமறைவாகி விட்டார். நீண்ட நாட்களாக நல்லதம்பியை பிடிக்க முடியாமல் போலீஸ் தவித்து வந்தது. நீண்ட நாட்களாக குற்றவாளி பிடிபடாமல் இருந்த இந்த வழக்கில், நல்லதம்பியை பிடிக்க சேலம் எஸ்பி கௌதம்கோயல் தனிப்படை அமைத்தார். 25 ஆண்டுகளுக்கு முன் ராணியை கொலை செய்து விட்டு தலைமறைவான நல்லதம்பி பற்றி ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போதுதான், சொந்த ஊரை விட்டு வெளியே சென்ற நல்லதம்பி, 4, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து, தனது உறவினர்களை பார்த்துச்செல்வது தெரியவந்தது. இந்த சூழலில்தான் நேற்று, உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை (60) தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளியாகின.
அதில், கடந்த 2000ம் ஆண்டில் தகாத உறவை துண்டித்துக் கொண்டதால், ராணியை கொலை செய்து விட்டு, ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து காலத்தை கடத்தி வந்துள்ளார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து, உறவினர்களை பார்த்துச்சென்றதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார். காதலியை கொலை செய்து விட்டு, தலைமறைவான கொலையாளியை, 25 ஆண்டுகள் கழித்து பிடித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.