

எஸ்.ஐ.ஆர். சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் 50,000 விவசாயிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் பிரதமர் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறார். பீகாரில் வென்ற பிறகு நடைபெறும் முதல் வெற்றி நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
“19ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு விமான நிலையம் வரும் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை டெல்லி திரும்புகிறார். அந்த நாளில் கட்சி தொடர்பான எந்த விதமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை” எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “எஸ்.ஐ.ஆர். என்பது பூதாகரமான, போலியான நிகழ்ச்சி என்பது போல உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணி இந்த நான்கு வருடத்தில் எந்த வேலையும் பார்க்கவில்லை. மத்திய அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பதுதான் அவர்களது வேலை.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் எல்லா இஸ்லாமியர்களையும் வெளியேற்றி விடுவார்கள் என்று சொன்னார்கள். குடியுரிமைச் சட்டம் வந்த பிறகும் ஒரு இஸ்லாமியர் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் அண்ணன் தம்பியாக நன்றாக இருக்கிறார்கள். உண்மையாக இந்தப் பிரிவினைவாதத்தைத் தூண்டி விடுவது நமது முதலமைச்சர்தான்.
திமுக அரசு சொன்னது எதையும் செய்வதில்லை. அவர்களின் ஒரே நோக்கம் துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆகுவது தான். அதற்காகத்தான் எல்லா கூட்டணியும் சேர்த்து வைத்து வேலை பார்க்கிறார்களே தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சாரை நினைத்துக் கொண்டு பயத்தில் உள்ளார்கள். பீகாருக்கு ராகுல்காந்தியை நம்பி முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு போனார். விளைவு, 202 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதிதாக இன்னொரு ஆள் கட்சி தொடங்கி 20 சதவீதம் வாக்கு பெறுவார் என்று கூறிய பிரசாந்த் கிஷோர், இரண்டு சதவீத ஓட்டுதான் பெற்றுள்ளார். அங்கு முதலமைச்சர் வேட்பாளராக இருந்த தேஜஸ்வி யாதவ் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெற்றி பெற்றுள்ளார்.
எஸ்.ஐ.ஆர். என்பது இறந்தவர்களை நீக்குவதும், புதிதாக உள்ளவர்களை இணைப்பதும் தான். இதில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது. வாக்காளர்களை சேர்ப்பதும் விடுவிப்பதும் தேர்தல் ஆணையம். அதை நடைமுறைப்படுத்துவது மாநில அரசாங்கம். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. ஏராளமான பாலியல் வன்கொடுமைகளும் கொலை குற்றங்களும் நடந்துள்ளது. அது எல்லாம் விட்டுவிட்டு எஸ் ஐ ஆர் பற்றி பேசுகிறார்கள். எஸ்.ஐ.ஆரில் என்ன உள்ளது யாருக்கும் புரியவில்லை எனக் கூறுவது , பயம் காட்டுவதுபோன்றுதான் உள்ளது. இதற்கு முன்பும் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்சியைச் சரியாக நடத்துங்கள். 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வரதட்சணைக்குச் தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.
பீகாரில் காங்கிரஸ் ஆறு தொகுதியில் தான் வெற்றி பெற்றது. செல்வபெருந்தகை திமுகவை விட்டுவிட்டு தனியாக நிற்கத் தயாரா? கூட்டணியை வைத்துக்கொண்டு தான் திமுக எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
சொத்து வரியை 300 சதவீதம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மின்சார கணக்கெடுப்பு எடுப்போம் என்று சொன்னதை செய்யவில்லை. திமுக அரசு நல்ல விஷயங்கள் எதுவும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது அதிகமான ஆசையாகக் கூட இருக்கலாம். ஆனால், நிச்சயமாக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். மக்களின் மனநிலை மாறி உள்ளது, 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று யூகத்தின் அடிப்படையில் சொல்கிறேன். அது நடக்கலாம் அல்லது அதிகமான ஆசையாக கூட இருக்கலாம்” என அவர் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.