madona  
க்ரைம்

வனத்துறை அதிகாரி முதல் சுகாதார ஆய்வாளர் வரை.. வெளிவந்த பல கல்யாணங்களின் கதை.. கையும் களவுமாக மாட்டிய கல்யாண ராணி!

இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடோனா சிறிது காலம் கனகராஜுடன் சென்று வாழ்ந்துள்ளார்.

Mahalakshmi Somasundaram

நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கரை பகுதியை சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார். அப்போது ஊட்டியில் இருக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் மடோனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மகேந்திரன் மன உளைச்சல் அடைந்து 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

magendran and madona

மகேந்திரன் இறந்தபிறகு 2017 ஆம் ஆண்டு கனகராஜ் என்பவரை மடோனா திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடனும் இரண்டு வருடம் வாழ்ந்த மடோனா பிறகு கனகராஜிடம் 9 லட்சம் பணத்தையும் 20 பவுன் நகைகளையும் மோசடி செய்து பறித்து கொண்டு இவரையும் விவாகரத்து செய்துள்ளார். கனகராஜ் ஒவ்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

kanakaraj and madona

இந்நிலையில் தான் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளரான வனத்தையன் மனைவியை இழந்து பெண் குழந்தையை தனியாக பார்த்து கொள்ளமுடியாமல் திருமணத்திற்கு பெண் தேடிவந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட மடோனா ஒரு கேரளா புரோக்கர் உதவியுடன்  வனத்தையனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வனத்தையன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து. வீட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளார். பிறகு தனியாக வாழ்ந்து வந்த மடோனாவிற்கும் வனத்தையனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடோனா சிறிது காலம் கனகராஜுடன்  சென்று வாழ்ந்துள்ளார்.

vanathaiyan and madona

வனத்தையனுக்கு கேன்சர் நோய் இருப்பதையும் அவர் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என்பதையும் அறிந்த மடோனா வனத்தையனுடன் வந்து சேர்ந்துள்ளார். வனத்தையன் இறந்த பிறகு அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சித்த மடோனா மீது வனத்தையன் மகள் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில்  மடோனா தனது இரண்டாவது கணவருடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது, அதில் “ இங்க பெரிய பிரச்சனை ஆயிடுச்சி அந்த பொண்ணு என் மேல கேஸ் போட்டு இருக்கு அந்த பொண்ணுக்கு நான் உன்ன கல்யாணம்  பண்ணிக்கிட்டது  எப்படி தெரியும்னு தெரியல, யாராவது உன்கிட்ட வந்து பேசுனா நமக்கு கல்யாணம் ஆகி நாம சட்டப்படி பிரிஞ்சது மட்டும் சொல்லு வேற எதும்  சொல்லாத, 50 லட்சம் சொத்தை என்ன எப்படி விட்டுட்டு வர சொல்றிங்க” என கேட்டு பேசியுள்ளார்.

வனத்தையன் மகள் அளித்த புகாரின் பேரில் மடோனாவை தேடிய மணிமங்கலம் போலீசார், மடோனாவை ஆவடியில் கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர்  குற்றம் நிரூபிக்கப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்